சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது
நேற்று இந்த படத்திற்கு ’மன்னவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் டிசைன் செய்த போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கு அண்ணாத்தே’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அண்ணனாக ரஜினிகாந்த் நடிப்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று இந்த டைட்டிலை வைத்துள்ளதாக படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது