சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி: விரைவில் சீரியல்கள் ஒளிபரப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்…


d949954c9f20ea0b8e73814e2394750c-3

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது

ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என சின்னத்திரை மற்றும் பெரிய திரை தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து சமீபத்தில் செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் முக்கிய தயாரிப்பாளர்களுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சின்னத்திரை சங்கத்தினர் தமிழக முதல்வருக்கும் தமிழக செய்தித்துறை அமைச்சருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்

தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதை அடுத்து நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அனேகமாக அடுத்த வாரம் முதல் அனைத்து சீரியல்களும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன