வேண்டாம் என்று சொன்ன தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருதுப் பாடல்.. சாதித்தது எப்படி தெரியுமா?

By John A

Published:

1966-ல் பெங்காலியில் வெளியான உத்திரபுருஷ் என்ற படத்தினைத் தழுவி தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஏவிஎம் தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த திரைப்படம்தான் உயர்ந்த மனிதன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்பபடத்தினை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டை இயக்குநர்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்குத் தான் முதன் முதலாக தமிழின் சிறந்த பாட்டிற்கான தேசிய விருது கிடைத்தது. அந்தப் பாடல் பால் போலவே.. நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..என்று நிலாவை அழைப்பதற்கு பதிலாக ரசிகர்களை இசை மழையில் நனையவிட்டார்கள், எம்.எஸ்.வி, பி.சுசீலா, வாலி கூட்டணி.

தமிழ் திரையிசைப் பாடல்களில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகத் திகழும் இந்தப் பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டது வந்து விட்டதாம். இந்நிலையில் இந்தப் பாடலை கொடைக்கானலில் ஷுட் செய்யலாம் என எண்ணி படக்குழுவினர் கொடைக்கானல் சென்றுள்ளனர். அந்நேரம் அங்கு இடைவிடாத மழை பொழிய ஷுட்டிங் தடைபட்டிருக்கிறது.

அடுத்தடுத்து முடியும் கதாபாத்திரங்கள்.. என்ன ஆச்சு எதிர்நீச்சல் சீரியலுக்கு? விரைவில் என்ட் கார்டா?

எனவே இயக்குநர் மீண்டும் சென்னை வந்துவிட்டார். இந்நிலையில் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் இந்தப் பாடலை விட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கின்றனர் ஏ.வி.எம் .நிறுவனத்தினர். ஆனால் எம்.எஸ்.வியும், ஏ.வி.எம். குமரனும் இந்தப் பாடல் மிக நன்றாக வந்திருப்பாதாகக் கூறிய நிலையில் 2 நாட்கள் மட்டும் இருந்தால் போதும் பாடலை முடித்து விடலாம் என்று கூற, மெய்யப்ப செட்டியாரும் ஓகே சொல்லி ஏ.வி.எம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டு இந்தப் பாடலின் ஷுட்டிங்கை முடித்திருக்கின்றனர்.

அதன்பின் படம் வெளியானது. பாடல்கள் ஓஹோவென ஹிட்டானது. மேலும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது நண்பனே.. பாடல், என் கேள்விக்கென்ன பதில்.. போன்ற பாடல்கள் தேருவியாய் பொழிந்தன. படமும் 125 நாட்களைத் தாண்டி ஓடியது. பி.சுசீலாவிற்கு நாளை இந்த வேளை பார்த்து.. பாடலுக்காக சிறந்த பின்னனி பாடகிக்கான தேசிய விருதும் பெற்றது. மேலும் தமிழக அரசின் திரைப்பட விருதுகளையும் வென்றது உயர்ந்த மனிதன் திரைப்படம்.