அடுத்தடுத்து முடியும் கதாபாத்திரங்கள்.. என்ன ஆச்சு எதிர்நீச்சல் சீரியலுக்கு? விரைவில் என்ட் கார்டா?

சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான எதிர்நீச்சல் தொடர் வருகிற ஜுலை மாதம் முதல் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குநர் திருச்செல்வம் தேவயானியை வைத்து இயக்கிய கோலங்கள் மெகாத் தொடர் பெண்கள் மற்றும் 90ஸ் கிட்ஸ்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

கோலங்கள் சீரியலுக்கு பல ரசிகர்கள் இருந்தனர். அந்த சீரியலுக்குப் பின் பல வருட இடைவெளி விட்டு கடந்த 2022-ல் இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கினார். கனிகா, மதுமிதா, ரேணுகா, ஹரிப்பிரியா, சத்யப்பிரியா ஆகியோருடன் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாரிமுத்துவின் மேனரிஸத்திற்காகவே சீரியல் ஜெட் வேகத்தில் பிக்கப் ஆனது. 2கே கிட்ஸ்களையும் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் கவரவே டி.ஆர்.பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் திடீர் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து மறையவே ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து அவர் நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என சோஷியல் மீடியாக்களில் மிகப்பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் அந்தக் கதாபாத்திரத்தில் வேல.ராமமூர்த்தி நடித்தார். என்னதான் வேல.ராமமூரத்தி சிறப்பாக நடித்தாலும் மாரிமுத்துவின் மேனரிஸங்களுக்காகவே சீரியலைப் பார்த்தவர்கள் அவர் இறப்பிற்குப் பின் சீரியல் பார்ப்பதை நிறுத்தினர்.

கங்கை அமரன் வீட்டில் டும் டும் டும்.. ஒரு வழியாக மாப்பிள்ளையான பிரேம்ஜி… கல்யாண தேதி குறிச்சாச்சு..

இதனால் டி.ஆர்.பி. ரேட்டில் எதிர்நீச்சல் போட முடியாமல் பின்வாங்கியது சீரியல். இதனையடுத்து திருச்செல்வம் சீரியலினுள் வந்தார். கதையில் பல்வேறு திருப்பங்களைக் கொண்டு வந்தார். எனினும் முதலில் இருந்த அந்த வேகமும், திரைக்கதையும் இல்லாததால் ரசிகர்கள் மாறினர்.

மேலும் அப்பத்தா கதாபாத்திரம், ஆதிரை அருண் கதாபாத்திரங்கள் போன்றவை அதிகம் இல்லாதது, கதிர் கதாபாத்திரம் நல்லவனாக மாறியது, ஜான்சிராணியின் பழைய நடிப்பு இல்லாதது போன்றவற்றால் சீரியல் எங்கெங்கோ போனது. இதனால் ரசிகர்களும் வேறு சீரியலை நோக்கிப் போக ஆரம்பித்தனர்.

எனவே சீரியலுக்கு என்ட்கார்டு போட்டுவிடலாம் என எண்ணியுள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக விபு (கதிர்), சத்யப் பிரியா ஆகியோர் சில சூசக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஜுலை முதல் சீரியல் முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. மாரிமுத்து (ஆதி குணசேகரன்) என்ற ஒரு நடிகர்இல்லாததால் ஒரு மெகா சீரியலே முடிவுக்கு வருவது அந்தக் கதாபாத்திரத்தின் ஆளுமையைக் காட்டுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...