தமிழ் திரை உலகில் நட்சத்திரங்களின் வாரிசுகள் நடிப்பது காலம் காலமாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அண்ணன் தம்பியாக இருந்தவர்களில் திரையுலகில் ஜெயித்தவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
எம்ஜிஆர் – சக்கரபாணி: மக்கள் திலகம் எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் அவரது சகோதரர் சக்கரபாணி ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதும் எம்ஜிஆர் உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் பலருக்கு தெரியாத உண்மை. 1936ஆம் ஆண்டு ‘இரு சகோதரர்கள்’ என்ற திரைப்படத்தில்தான் சக்கரபாணி அறிமுகமானார். இதையடுத்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக சக்கரபாணி எம்ஜிஆர் படங்களில் நடித்துள்ளார். மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன், நம் நாடு, நாளை நமதே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!
எம்.ஆர்.ஆர்.வாசு – எம்.ஆர்.ஆர்.ராதாரவி: எம்.ஆர்.ராதாவின் மகன்கள் எம்ஆர்ஆர் வாசு மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். ராதாரவி பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நாடுகளில் நடித்துள்ளார் என்பதை போல் எம்ஆர்ஆர் வாசு தாயை காத்த தனயன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு எதிர் நீச்சல், பூவா தலையா, சொர்க்கம், புன்னகை, ஞான ஒளி, நீதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபு – ராம்குமார்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும் ஒரு முன்னணி நடிகர் என்பது தெரிந்ததே. பிரபுவின் சகோதரரான ராம்குமாரும் நடிகர்தான். இவர் 1986ஆம் ஆண்டு வெளியான அறுவடை நாள் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ஆனந்த், என் தமிழ் என் மக்கள், வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் எல்கேஜி, பூமராங் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சூர்யா – கார்த்தி: தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும் இருவரும் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!
செல்வராகவன் – தனுஷ்: செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் தற்போது நடிப்பதிலும் பிஸியாகி வருகிறார். அதேபோல் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக தனுஷ் உள்ளார்.
மோகன் ராஜா – ஜெயம் ரவி: அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி இருவரும் தமிழ் திரை உலகில் ஜொலித்து வருகின்றனர். மோகன் ராஜா இயக்குனராக இருந்தாலும் என்ன சத்தம் இந்த நேரம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
வெங்கட் பிரபு – பிரேம்ஜி: அதேபோல் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி தமிழ் திரை உலகில் நடித்துள்ளனர். இயக்குனராக மட்டுமே அறிந்த வெங்கட் பிரபு, ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், சிவகாசி, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில், சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
ஆர்யா – சத்யா: அதேபோல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா ஒரு பிரபல நடிகர். ஆர்யாவின் சகோதரர் சத்யா என்பவரும் ஒரு நடிகர். ஆர்யாவின் சகோதரர் சத்யா புத்தகம், அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?
ஜீவா – ஜித்தன் ரமேஷ்: அதேபோல் தமிழ் திரையுலகின் சகோதர நடிகர்களில் ஒருவர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ். ஜீவா தமிழ் திரை உலகில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் ஜித்தன் ரமேஷ், ஜித்தன், ஜித்தன் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.