சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 32 வயதாக இருக்கும்போது 30 வயது கமலா காமேஷ் அவருக்கு அம்மாவாக நடித்தார். தன்னைவிட வயது மூத்த பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த கமலா காமேஷின் அறியப்படாத பக்கங்களைதான் தற்போது பார்க்க போகிறோம்.
கமலா காமேஷ் சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்தவர். 1952ஆம் ஆண்டு பிறந்த இவர் 60ஆம் ஆண்டுகளிலே நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதன் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா அறிமுகமான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் அம்மாவாக முதன்முதலில் நடித்தார்.
தொழிலதிபரை திருமணம் செய்தவுடன் டார்ச்சர் செய்த பிரபலங்களை வச்சு செஞ்ச சமீரா ரெட்டி..!
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை நாயகியாக சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த கமலா காமேஷ், அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கார்த்திக் ஜோடியாக தான் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சந்தோஷத்துடன் சென்றார்.
ஆனால் கார்த்திக் அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்த அவர் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த கேரக்டர் முக்கியத்துவத்தை அவருக்கு விளக்கி பாரதிராஜா ஒப்புதல் பெற்றார். அதன் பிறகு அவருக்கு வந்தது எல்லாமே அம்மா வேடம்தான் என்பது மிகவும் சோகமான விஷயமாகும்.
குறிப்பாக ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மணல் கயிறு’, ‘சிம்லா ஸ்பெஷல்’ ஆகிய படங்களில் அம்மாவாக நடித்தார். கமல்ஹாசன் நடித்த ‘சிம்லா ஸ்பெஷல்’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் நண்பர் எஸ்.வி.சேகருக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல் ‘மூன்று முகம்’ திரைப்படத்தில் 3 ரஜினிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகும் போது ரஜினி வயது 32, கமலா காமேஷ் வயது 30 என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தன்னைவிட 2 வயது அதிகமான சத்யராஜ் அம்மாவாக ‘கடலோர கவிதைகள்’ திரைப்படத்தில் கமலா காமேஷ் நடித்தார்.
கடந்த 80ஆம் ஆண்டுகளில் பரிதாபமான அம்மா வேடம் என்றால் உடனே இயக்குனர்களின் மனதில் தோன்றுவது கமலா காமேஷ்தான்.
ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!
நடிகை கமலா காமேஷ் நாடக நடிகரான காமேஷ் என்பவரின் நாடகத்தில் நடித்திருக்கிறார். அப்போது அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து 1974ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளின் ஒரே மகள் உமா ரியாஸ். இவர் தற்போது நடிகையாக இருக்கிறார்.
நடிகை கமலா காமேஷ் கடந்த 1974ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 10 ஆண்டுகளில் தனது கணவரை இழந்தார். இதனை அடுத்து மகள் உமாவை வளர்க்கும் பொறுப்பு வந்ததால் அவர் அம்மா உள்பட எந்த வேடம் கிடைத்தாலும் நடித்தார்.
குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசுவுக்கு மனைவியாகவும், மோகன் சுகாசினி நடித்த ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கமலா காமேஷ்க்கு மிகப்பெரிய அளவில் புகழை பெற்று தந்த படம் என்றால் அது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம்தான்.
கோதாவரி என்ற கேரக்டரில் அவர் உருக்கமாக நடித்திருப்பார். மனோரமா உடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடியாகட்டும், லட்சுமியின் சிறந்த மாமியாராக இருப்பதாகட்டும் கணவருடன் பேசாமல் இருக்கும் காட்சிகளாகட்டும் அவர் மிகவும் அருமையாக நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசத்திர நடிகை ஆக கமலா காமேஷ் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு கூட ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படம்..!
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். மேலும் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.