தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகர், வில்லன் நடிகர் மற்றும் ஹீரோ என பலவித அவதாரங்கள் எடுத்து நடித்தவர் நடிகர் கரண் என்பதும் ஆனால் அவர் மேனேஜராக வைத்திருந்த ஆன்ட்டி ஒருவரால் சினிமா வாய்ப்பை முற்றிலுமாக இழந்து அதன் பின்னர் சினிமாவே வேண்டாம் என்று விரக்தி அடைந்து அமெரிக்காவில் போய் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கரண் சிறுவயதில் ஏராளமான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜெய்சங்கர் நடித்த ‘எங்க பாட்டன் சொத்து’ என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் அவர் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து குணச்சித்திர நடிகர் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கரணுக்கு சினிமாவில் அடையாளம் கொடுத்தது கமல்ஹாசன் உடன் அவர் நடித்த ’நம்மவர்’ திரைப்படம் தான். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக ஒரு வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்,. அதேபோல் ரஜினியுடன் அவர் நடித்த ’அண்ணாமலை’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி ஹீரோவாக இருந்த அஜித், விஜய், பிரசாந்த் ஆகியவர்களுக்கு நண்பனாக நடித்திருந்தது தான் அவரது சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’லவ் டுடே’ படத்தில் விஜய்க்கு நண்பனாகவும் ’கண்ணெதிரே தோன்றினாள்’ திரைப்படத்தில் பிரசாந்துக்கு நண்பனாகவும் அஜித் நடித்த ’உன்னை தேடி’ திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நண்பனாக நடித்தார்.
இதனை அடுத்து ரஜினி, கமலுக்கு எப்படி சரத் பாபுவோ, அதேபோல் அஜித் விஜய்க்கு நண்பன் கேரக்டர் என்றால் உடனே கூப்பிடு கரணை என்ற அளவுக்கு அவரது மார்க்கெட் இருந்தது. இதனை அடுத்து ஒரு சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கட்டத்தில் அவர் பல தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்பட்டதாகவும் போலியான செக் பெற்று ஏமாந்ததாகவும், பேசிய தொகையை விட குறைவான சம்பளம் கொடுத்தும் ஏமாற்றியதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஓரளவுக்கு நன்றாக வளர்ந்தவுடன் அவர் தயாரிப்பாளரிடம் பண விஷயத்தில் கறாராக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது ஆன்ட்டி ஒருவரை மேனேஜராக அவர் வைத்திருந்தார் என்றும் அவர்தான் கரணை ஆட்டி படைத்ததாகவும் கூறப்பட்டது. அவரது சினிமா மார்க்கெட் படிப்படியாக வீழ்ச்சி அடைந்ததற்கும் அந்த ஆண்ட்டி தான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது அந்த காலத்தில் பத்திரிகைகளில் கிசுகிசுவாக வந்ததே தவிர இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
அஜித், விஜய்க்கு இணையாக கரண் ரசிகர் மன்றத்தை வைத்திருந்தார் என்பதும் ரசிகர் மன்றத்தின் மூலம் ரத்த தானம் உள்ளிட்ட சமூக சேவையும் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நடிகர் கரண் விரைவில் சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சென்னை வருவாரா? மீண்டும் வில்லன் வேடத்தில் கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
