தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானாலும், இவருக்கு தென்னிந்தியாவில் வாய்ப்பானது தெலுங்கு சினிமாவிலேயே கிடைக்கப் பெற்றது.
இவர் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவர் ஓரளவு பிரபலமானது கல்லூரி திரைப்படத்தில்தான். அதன்பின்னர் இவர் வியாபாரி, இன்று நேற்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
கேடி படத்தில் நடிப்பதற்கு முன்னர் இவர் சீறி என்னும் தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார்.
2005 ஆம் ஆண்டு தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கிய தமன்னா, தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
கொரோனா பாதிப்பால் சினிமா உட்பட பல தொழில்கள் நடைபெறவில்லை, அதனால் தமன்னா வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையிலும், ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார்.
ஆனால் ரசிகர்கள் மற்றொரு புறம், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் இருவரும் நகைக் கடையில் நகை வாங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.
இதனால் கடுப்பாகிப் போன தமன்னா கடும் கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமன்னாவின் திருமணம் குறித்த வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.