பாகுபலி நாயகன் பிரபாஸ் அவரின் நடிப்பில் 3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஆதிபுருஸ். ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டீசர், ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்தது. ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் சின்ன குழந்தைகள் பார்க்கும் பொம்மை படம் மாதிரி இருப்பதாகவும் கடும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
டெக்னாலஜி சரியாக பயன்படுத்தாமல் ராமாயண காவியத்தை சொதப்பிய இந்த படக்குழு வசூலில் பலத்த அடி வாங்கியது. அந்த வகையில் இந்த படத்திற்கு எழுந்துள்ள விமர்சனங்களை பார்த்து தற்பொழுது கங்குவா படக்குழு அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கங்குவா திரைப்படமும் வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வருவதால், ஆதிபுருஸ் படத்தை போல இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது.
அதற்கு ஏற்ப நடிகர் சூர்யா அவர்களும் கங்குவா படத்தின் மேக்கிங் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெக்னாலஜி வேலைகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் அதிகமாக தான் உள்ளது. அதிலும் சூர்யாவின் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். அதனால் சூர்யா இப்போது சிறுத்தை சிவாவுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளாராம்.
அதாவது படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வந்திருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்த படப்பிடிப்பில் நான் நடிக்க மாட்டேன் என ஒரு அதிர்ச்சியான வைத்தியம் கொடுத்து இருக்கிறாராம் சூர்யா.
அட இப்படி கூட டைட்டில் வைக்கலாமா… ஒரு எழுத்தில் டைட்டில் வைத்த மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரு பார்வை!
இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் தற்போது பட வேலைகளை இன்னும் கொஞ்சம் கவனமாக பார்த்து பார்த்து சிறப்பாக முடித்து வருகிறார். நடிகர் சூர்யா சிறுத்தை சிவா மீது கொஞ்சம் ஏமாற்றத்தில் தான் இருக்கிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கு காரணம் ஆரம்பத்தில் இருந்தே இந்த படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என பயங்கரமாக பில்டப் கொடுத்து வரும் நிலையில் கடைசியில் ஆதிபுருஷ் 2.0 ஆக இருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது என்கிற மாதிரியும் பல பேர் தற்போது வரைக்கும் ட்ரோல் செய்து வருகின்றனர்.