அட இப்படி கூட டைட்டில் வைக்கலாமா… ஒரு எழுத்தில் டைட்டில் வைத்த மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரு பார்வை!

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை திரைப்படங்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு திரைப்படங்கள் மக்கள் மனதில் ஆளமாக பதிந்துள்ளது. அதிலும் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் திரைக்கு வந்தால் வரவேற்பு பலமாக இருக்கும்.

நடிகர்களை முன்னணி ஹீரோவாகவும், ரசிகர்களுக்கு பிடித்த கதாநாயகனாகவும் மாற்றுவது அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதையை பொறுத்து தான் அமையும். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோவாக சிலரால் மட்டும் தான் இடம் பிடிக்க முடியும்.

அந்த வகையில் மக்கள் மனதை கவரும் விதமாக படத்தின் ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்த படியாக கதைக்கு ஏற்ப படத்தின் தலைப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்துள்ளனர். மேலும் சில வித்தியாசமான தலைப்புக்கள் வைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அந்த காலத்தில் தலைப்பின் காரணமாக 100 நாட்களை கடந்து வருடம் முழுக்க ஓடிய திரைப்படங்களும் உள்ளது.

தற்பொழுது ஒரு எழுத்தில் டைட்டில் வைத்த மாஸ் ஹீரோக்களின் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

1. நீ

1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் நீ. டி.ஆர்.ராமண்ணா கனகசண்முகம் இயக்கத்தில் இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி.

2. தீ

1981 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

3. தீ

சுந்தர் .சி நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் தீ. இப்படத்தில் சுந்தர் சி , நமீதா மற்றும் ரம்யா ராஜ் நடித்துள்ளனர். விவேக் , ஜிஎம் குமார் , மனோஜ் கே.ஜெயன் மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்க்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார், இப்படம் 27 பிப்ரவரி 2009 அன்று வெளியானது. இப்படம் ஆபரேஷன் துரியோதனா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்

4. ஸ்ரீ

சூர்யா நடிப்பில் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஸ்ரீ. இப்படத்தை புஷ்பவாசகன் இயக்கினார். இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இத்திரைப்படத்தின் சில பாடல்களை எழுதியுள்ளார். இதில் ஸ்ருதிகா மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.

5. ஜி

அஜித் நடிப்பில் 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஜி . இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளனர். ரன் திரைப்படப் புகழ் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ் .எஸ்.சக்கரவத்தி தயாரித்துள்ளார் .வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பிப்ரவரி 21, 2005ல் வெளிவந்தது.

6. 3

நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் 3 . இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடல் ‘வொய் திஸ் கொலவெறி டி’ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

7. ஈ

ஜீவா நடிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஈ. இத்திரைப்படத்தை S.P. ஜனநாதன் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா, கருணாஸ், பசுபதி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

8. பூ

ஸ்ரீகாந்த் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் பூ. படத்தின் கதாநாயகியாக பார்வதி மேனன் நடித்துள்ளார் . ‘வெயிலோடு போய்’ எனும் ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதையினை தழுவி திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.

விஜய்யின் ரீமேக் படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!

9.கோ

ஜீவா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படம் கோ. இப்படத்தில் ஜீவா , அஜ்மல் , கார்த்திகா ,பியா பாஜ்பாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த திரைப்படம் 22 ஏப்ரல் 2011 அன்று வெளியிடப்பட்டது, பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

10. ஐ

நடிகர் விக்ரமின் 50வது திரைப்படம் ஐ. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்தது. சங்கர் இயக்கத்தில் இந்த படத்தை வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார். ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews