இயக்குனர் கே.பாலசந்தரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்த அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வரவே சென்னை வந்தார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ்சினிமா உலகில் களம் இறங்கினார். பைரவியின் வீடு இதுதானா? நான் தான் பைரவியின் புருஷன் என்று படத்திற்காக முதன் முதலில் வசனம் பேசினார் ரஜினி.
தொடர்ந்து தன் அசாத்திய திறமையால் 16 வயதினிலே, மூன்று முடிச்சு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார். பைரவி படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ஆனார். தொடர்ந்து தமிழ்த்திரை உலகில் இன்று வரை உச்சநட்சத்திரமாக இருந்து வருகிறார். காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டி ரஜினி. உண்ணாவிரதம் இருந்தார்.
இலங்கைத் தமிழர்களுக்காக ரஜினி குரல் கொடுத்தார். வேறு எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா என கேட்பவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களுக்காகவே தற்போது ரஜினிகாந்த் பெரிய மருத்துவமனை கட்டப் போகிறார். என்னவென்று பார்க்கலாமா…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எளிமையானவர். பெருந்தன்மை குணம் கொண்டவர். அரசியலில் சேர விரும்பினார். ஆனால் வயது மற்றும் அது சம்பந்தமான நோய்கள் காரணமாக அரசியலைக் கைவிட்டார்.

தனது அரசியல் கட்சியை சமாஜ் சேவா சங்கம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக மாற்றினார். இது ஏழை மற்றும் அவர்களது முன்னேற்றத்தின் காரணமாக துவங்கப்பட்டது. சென்னையில் 12 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை கட்ட ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளாராம்.
சில நாள்களுக்கு முன்பு சென்னை திருப்போரூர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு ரஜினிகாந்த் வந்தார். அங்கு அவர் புதிதாக வாங்கிய நிலத்துக்கான பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அப்போது ரஜினி வருவதை அறிந்த ரசிகர்கள் ஏராளமாகத் திரண்டனர்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தை ரஜினி வாங்கியுள்ளார். அந்த இடத்தில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டத் திட்டமிட்டுள்ளார். ஏழைகளுக்கு உயர்தர இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரம் நன்கொடை மூலம் பணம் வசூலிக்கப்படுமாம்.
மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாம். தற்போது ரஜினிகாந்த் ஹைதரபாத்தில் வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


