தமிழ்த்திரை உலகின் இருண்ட பக்கங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் யார் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் ஒரு வித்தியாசமான நடிகர். இவரது வருகைக்குப் பிறகு தான் தமிழ்சினிமாவில் கருப்பு நடிகர்களுக்கு கொஞ்சம் மவுசு வந்தது. அதுவரை சுருள்முடி மற்றும் நல்ல நிறம் கொண்ட ரசிகர்கள் தான் கதாநாயகர்களாக வலம் வந்தனர்.

ஆனால் பரட்டைத்தலையுடன் கருப்பு நிறத்துடன் சராசரி மனிதனைப் போல வலம் வந்தவர் ரஜினிகாந்த் தான். அவரது ஆரம்ப கால படங்களில் நிதானமான கதாபாத்திரங்களில் நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அவர்கள், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் படங்களைப் பார்த்தால் உங்களுக்கேத் தெரியும். ஜானி, மூன்றும் முகம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அது போல முள்ளும் மலரும் படத்தில் இவரை விட வேறு எந்த நடிகரும் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அது இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது.
தமிழ்த்திரை உலகில் ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் எடுத்து அதில் முதன் முதலாக ஜெயித்துக் காட்டியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இந்த முயற்சியை செய்யவில்லை. ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் பிரிவில் பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளைக் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் எந்திரன், 2.O, சிவாஜி, பேட்டை, கபாலி படங்களில் அவரது சூப்பர்ஹிட்டானவை. அதனால் தான் ரஜினிகாந்த்தால் நிறைய சூப்பர்ஹிட் படங்களைக் கொடுக்க முடிந்தது. தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு அதை திறம்பட இன்று வரை செய்து அசத்துகிறார்.
விரைவில் வெளிவர உள்ள ஜெயிலர் படத்தில் கூட வயதானாலும் சரி. என்னோட கேரக்டரை நான் மாற்ற மாட்டேன். ஸ்டைலு ஸ்டைலு தான். இனி பேச்சுக்கு இடமே இல்லை. ஒரே வீச்சு தான்னு அதிரடி காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பாடலுக்கு தமன்னாவுடன் ஜோடியாக நடனம் ஆடி அசத்தியுள்ளார். சண்டைக்காட்சிகளிலும் தூள் கிளப்பியுள்ளார். படம் வெளியாவதற்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


