கங்குவாவுடன் மோதும் வேட்டையன்.. ரிலீஸ் தேதி அறிவிப்பால் குஷியான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

By John A

Published:

ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேலின் அடுத்த படமான வேட்டையன் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின் சூப்பர் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானாலும் சுமாரான வெற்றியையே பெற்றது. இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு முழு திருப்தியைத் தரவில்லை. இதனிடையே ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வந்தார். திருநெல்வேலி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

அர்ஜுன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே தயாரித்து இயக்குகிறாராம்… ஹீரோ யார் தெரியுமா…?

ரஜினியுடன் இப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், தூஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இதில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மளமளவென ஷுட்டிங் தொடங்கப்பட்டு தற்போது படம் ரிலீஸ்க்கு காத்திருக்கிறது. லைகா புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 10 தசரா பண்டிகை விடுமுறையை யொட்டி படம் வெளியாகிறது. இந்தத் தேதியில் தான் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜுன் மாதம் இந்தியன் 2 ரிலீஸ் ஆனது, இதனையடுத்து தற்போது தங்கலான் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவான தி கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த அக்டோபர் மாதம் கங்குவா, வேட்டையன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தீபாவளியையொட்டி விடாமுயற்சி, அமரன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் சினிமா உலகில் இது பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.