சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள ட்ரெய்லரை குறித்து தற்போது பார்ப்போம்.
முதல் காட்சியிலேயே பாலைவனம் போல் இருக்கும் பகுதியில் சில வாகனங்கள் வருவதும் அந்த வாகனங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்படும் காட்சியிலிருந்து இந்த படம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
இந்தியன் படத்துல ஒரு துளி கூட ரஜினி சாரோட சாயல் இருக்காது… இயக்குனர் ஷங்கர் பளீர் பேச்சு
இதனை அடுத்து ‘நாங்கள் சிபிஐயில் இருந்து வருகிறோம்’ என்று அதிகாரி ஒருவர் சொல்ல ‘டொனேஷன் எதுவும் வேணுமா’ என்ற நெல்சன் டார்க் காமெடி காட்சியிலிருந்து அவர் தனது பாணியிலிருந்து இந்த படத்திலும் விலகவில்லை என்பது தெரிய வருகிறது.
இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதல் முதலாக காண்பிக்கும் போது ‘இந்த நோய் வந்தவர்கள் பூனை மாதிரியே இருப்பார்கள், ஆனால் திடீர் என புலியாக மாறுவார்கள்’ என்று கூறுவதில் இருந்து ரஜினியின் கேரக்டர் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் புயலாக மாறப்போகிறது என்பதை கோடிட்டு காட்டுகிறார்.
மேலும் தனது மனைவியிடம் சாப்பிட உட்கார்ந்தபோது அப்பாவியாக ‘புதினா சட்னி இல்லையா?’ என்று கேட்பதும், அதற்கு ரம்யா கிருஷ்ணன், ‘அதான் இவ்வளவு இருக்குறது இல்ல சாப்பிடுங்க’ என்று அமைதியாக கூறுவதும் நெல்சன் பாணியின் காட்சிகள் ஆகும்.
அதேபோல் தனது மகன் மற்றும் பேரனின் ஷூவுக்கு பாலிஷ் போட்டுவிடும் காட்சிகள் அவர் குடும்பத்தினர் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை குறிப்பிடும் காட்சிகளாக தெரிகிறது.
யோகி பாபுவின் காரில் குறுக்கே வந்து கீழே விழும் ரஜினியை பார்த்து ‘ஒரு நாளைக்கு பிரேக் பிடிக்காமல் தட்டி தூக்கிட்டு 5000 ரூபாய் பைன் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்’ என்று யோகி பாபு கூறுவதில் இருந்து அவர் கோலமாவு கோகிலா படத்தை அடுத்து இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!
ஆரம்பக் காட்சியில் கூறுவது போல் பூனையாக இருந்த ரஜினிகாந்த் திடீரென புலியாக மாறும் மாஸ் காட்சியில் இருந்து ஆக்சன் ஆரம்பிக்கின்றது. அதன் பிறகு படம் முழுவதும் புயல் வேகம் தான் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
முதல் முதலாக தன்னை தாக்க வரும் நபரை குத்தி கொலை செய்துவிட்டு சற்றே திரும்பி அவர் சிரிக்கும் புன்னகையிலிருந்து அவரது கேரக்டரின் உள்ளர்த்தம் புரிய வருகிறது.
இந்த படத்தின் மெயின் வில்லனாக விநாயகன் நடித்திருக்கிறார் என்பதும் அவரது ஆக்ரோஷமான காட்சியிலிருந்து அவர் தமிழ் சினிமாவில் வில்லன் வேடத்தில் ஒரு சுற்று வருவார் என்பது தெரிய வருகிறது.
அதேபோல் இந்த படத்தின் இன்னொரு வில்லனாக ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. எதிரிகளிடம் இருந்து தனது பேரனை காப்பாற்றும் காட்சி, ஜாக்கி ஷெராப் மிரட்டலுக்கு புன்சிரிப்போடு சிரித்துக்கொண்டே ‘ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்’ என்று அமைதியாக சொல்வதில் ஆகட்டும் ரஜினியின் மாஸ் காட்சிகள் தெறிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.
அனேகமாக இந்த படத்தின் இரண்டாம் பகுதி முழுவதுமே அதிரடி ஆக்சன் காட்சிகளாகத்தான் இருக்கும் என்று ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினியின் பெயர் டைகர் முத்துவேல் பாண்டியன் என்பதும் ட்ரைலரிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் தனது வீட்டிற்கு வந்த எதிரியை அடித்து நொறுக்கும்போது ரம்யா கிருஷ்ணன் அப்பாவியாக ‘கொஞ்சம் இதோட நிறுத்திக் கொள்ளலாமா?’ என்று நடுங்கி கொண்டே கேட்கும்போது, புன்சிரிப்புடன் மறுக்கும் ரஜினிகாந்த், ‘ரொம்ப தூரம் போயிட்டேன், ஃபுல்லா முடிச்சிட்டு தான் திரும்ப வருவேன்’ என்று கூறுவதில் இருந்தே இந்த படத்தின் கதையை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
தமன்னாவா இப்படி.. ரஜினியே நினைச்சிருக்க மாட்டாரு… நெல்சன் சார் என்ன இதெல்லாம் !
அனிருத்தின் அதிரடியான பின்னணி இசையுடன் கூடிய பாடல், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஆகியவை இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ரஜினியின் பிளாஷ்பேக் ஜெயிலர் காட்சிகளும் மாஸாக இருக்கும் என்பது ஒரு சில டிரைலர் காட்சியில் இருந்தே தெரிய வருகிறது. மொத்தத்தில் ரஜினி ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக ரசிக்கும் அளவிற்கு இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது என்பதால் இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்கு இணையாக மிகப்பெரிய வசூலை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.