தளபதி படத்துல சூர்யா.. கூலி படத்துல தேவா.. வெளியான அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கும் வைத்துள்ளார் லோகேஷ்…

Coolie Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கும் வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையைமக்கிறார். ஏற்கனவே கமலுக்கு அவரின் ரசிகனாக விக்ரம் என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தினைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்க்கு மாஸ்டர், லியோ என அதிரடி ஆக்ஷன் படங்களைக் கொடுத்தார்.

இந்நிலையில் கூலி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வந்தன. ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹீர், உபேந்திரா, கிரிஷ் கங்காதரன் உள்ளிட்ட இந்தியா சினிமா நட்சத்திரங்கள் அனைத்தும் கூலி படத்தில் இணைகின்றனர்.

Post Office இன் இந்த திட்டத்தில் ரூ. 100 இல் இணையுங்கள்… 10 வருடங்களுக்கு பிறகு ரூ. 8 லட்சம் கிடைக்கும்… எப்படி தெரியுமா…?

தற்போது ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தளபதி படத்தில் சூர்யாவாக நடித்த ரஜினிக்கு அதில் உயிர் நண்பனாக மம்முட்டி தேவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தேவா என்ற பெயர் ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பினைப் பெற்ற நிலையில் தற்போது படத்தில் இணைந்துள்ள அனைத்து நட்சத்திரங்களின் கதாபாத்திரங்களும் அறிவிக்கப்பட்டு விசாகப் பட்டினத்தில் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் அடுத்தடுத்து ரஜினியின் படங்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.