வாயார வாழ்த்திய சூப்பர் ஸ்டார் : 100% கப் நமக்குத்தான்

By John A

Published:

உலகக் கோப்பை கிரிக்கெட் காய்ச்சல் அனைவரையும் படுத்தி எடுக்கிறது. 13-வது ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் விளையாட்டின் உலகக் கோப்பை போட்டி கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. இந்தியா ஏற்று நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 48 ஆட்டங்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் பத்து வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள பத்து வெவ்வேறு மைதானங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி முறையே மும்பை வான்கடே மைதானத்திலும் , கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெற்றது. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது.

அரையிறுதிக்குத் தகுதிபெற்ற இந்தியா இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு பல மகத்தான சாதனைகளுடன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. விராட் ஹோலி ஒரு நாள் தொடரில் 50 சதங்களை விளாசி மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். முகம்மது ஷமியும் சிறப்பாகப் பந்து வீசி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இதுவரை 9 போட்டிகளில் இந்திய அணி விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

விராட் ஹோலியின் சாதனைகளையும், இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டி பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும் அரையிறுதிப் போட்டியை நேரில் காணச் சென்ற சூப்பர் ஸ்டார் தனது குடும்பத்தினருடன் போட்டியை மிகவும் ரசித்துக் கண்டார்.

இப்படியா வசனம் எழுதுறது? கே. பாலசந்தருக்கே குட்டு வைத்த பிரபலம் : கற்றுக் கொண்ட கே.பி.ஆர்.

இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 100% கப் நமக்குத்தான்“ என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முகம்மது ஷமியின் பந்துவீச்சையும் பாராட்டினார்.

தற்போது இறுதிப் போட்டியைக் காணவரும் நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன் 10 நிமிடங்கள் இந்திய விமானப் படையின் சாகசங்கள் இடம் பெற உள்ளன. இதற்காக தற்போது ஒத்திகை பார்க்கப்படுகிறது. மேலும் அதிக அளவு இரசிகர்கள் கூடுவார்கள் என்பதாலும், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாலும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் நரேந்திர மோடி மைதானம் தயாராகி வருகிறது.