இப்படியா வசனம் எழுதுறது? கே.பாலசந்தருக்கே குட்டு வைத்த பிரபலம்… கற்றுக் கொண்ட கே.பாலச்சந்தர்!

இயக்குநர் இமயம் கே. பாலச்சந்திரன் படங்களை நாம் போற்றிக் கொண்டாடி வரும் வேளையில் இவர் முதன் முதலாக எழுதிய வசனத்தை அடித்து திருத்தி அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் ஆர்.எம். வீரப்பன்.

கே. பாலசந்தரை முதன் முதலில் திரையுலகில் நுழைத்தவர் எம்.ஜி.ஆர். பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று “மெழுகுவர்த்தி.” ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க “தெய்வத்தாய்” என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

அதுக்கு மட்டும் நோ சொன்ன அஜீத்..! மேடையில் செய்த சம்பவத்தால் உறைந்த உச்ச நட்சத்திரங்கள்

இந்த சந்தர்ப்பம் பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எழுதித்தரும் வசனங்களை, ஆர்.எம்.வீ. கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே’ என்று முதலில் வருந்தினாராம்.

ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டார். ஒரு முறை கே.பி.ஆர் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி மாற்றி அமைத்தார் ஆர்.எம்.வீ. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி எப்படி வசனங்களை எழுத வேண்டும் என கற்றுக் கொண்டாராம் கே.பி.ஆர்.

தெய்வத்தாய் என்ற ஒரு படமே அவருக்கு பல்கலைக் கழகமாக விளங்கியது.
“தெய்வத்தாய்” வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே’ என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

“தெய்வத்தாய்” படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது. அதிலிருந்து கற்றுக் கொண்டு 1965ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார். அதன்பின் கே. பாலசந்தர் இயக்குநர் இமயமாக உயர்ந்தது தனி வரலாறு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...