குழப்பத்திற்கு மத்தியில் மாஸ் அப்டேட் வெளியிட்ட சன் பிச்சர்ஸ்! உறுதியான ரஜினி – லோகேஷ் கூட்டணி!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது. பான் இந்திய திரைப்படமாக உலக அளவில் வெளியான இந்த திரைப்படத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தின் வெற்றியை வேற லெவலில் கொண்டாடி வருகிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் சம்பளத்தை தாண்டி ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையையும், சொகுசு காரையும் அன்பளிப்பாக வழங்கியது.

அதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் விலையுயர்ந்த சொகுசு போர்ஸ் மக்கான் காரை பரிசாக வழங்கியுள்ளது. மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ஜெயிலர் பிலிம் தயாரிப்பு நிறுவனம் சார்பில், படக்குழுவினர் 300-க்கும் மேற்பட்டோருக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெயிலர் பெயர் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சி வரும் விநாயக சதுர்த்தி விழாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி அடுத்ததாக லைக்கா ப்ரொடெக்க்ஷன் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அமிதாப் பச்சன், பாகுபலி வில்லன் ராணா , துசாரா விஜயன் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரஜினியின் 171வது படம் குறித்து பல சர்ச்சைகள் வெளிவர தொடங்கிய நிலையில் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்பொழுது ரஜினியின் 171வது படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய்யின் லியோ படத்தில் இப்படி ஒரு சண்டை காட்சியா? மாஸான அப்டேட் கொடுத்த இயக்குனர்!

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என உறுதியான தகவலை வெளியிட்டுள்ளார்கள். மேலும் படத்தில் அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்ற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி பட தகவல் உறுதியானதை அடுத்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...