மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் பால்கனி ராஜாக்களுக்கு தான் உதவுபவராக இருக்கீறீர்கள் என தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளை கடுமையாக சாடி இருந்தார்.
இதை பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா இணைய தொலைக்காட்சியில் கமலை கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதை மக்கள் நீதி மய்ய செய்தி தொடர்பாளர் திரு.முரளி அப்பாஸ் அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன் கண்டித்திருந்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பு வகிப்பவரான நடிகை ஸ்ரீபிரியா கடுமையாக சாடியுள்ளார் பாண்டேயை கண்டித்து அவர் எழுதியுள்ள காட்டமான கடிதம் இதோ.
எனக்கு கூலிக்கு மாரடிக்க தெரியாது என கடுமையான வார்த்தைகளை ஆட்சேபகரமாக தெரிவித்துள்ள ஸ்ரீபிரியாவின் கடிதம் இதோ.