மாஸ்டர் படம் தாமதம் பற்றி வில்லன் அர்ஜூன் தாஸ்

By Staff

Published:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தில் கொடூர வில்லனாக போதைப்பொருளை எடுத்து முகர்ந்து விட்டு , இளையராஜாவின் ஆச அதிகம் வச்சு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டவர் அர்ஜூன் தாஸ். இவர் இப்படத்தில் டெரர் வில்லனாக கலக்கி இருந்தார்.

679775765bf373be6396b74a606315ff-1

இவர் மாஸ்டர் படத்திலும் நடித்து உள்ளார். நேற்று முன் தினம் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா பிரச்சினையால் ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள அர்ஜூன் தாஸ்.

மாஸ்டர் படம் பார்க்க ஆவலாக இருந்தேன். நல்ல விசயங்கள் கொஞ்சம் லேட்டாகத்தான் நடக்கும் அதற்காக காத்திருப்போம். வீட்டில் இருக்கும் விலைமதிப்பற்ற நேரத்தை அன்புக்குரியவர்களுக்கு செலவிடுவோம்.இந்த பிரச்சினைகளை வென்று மாஸ்டரை ஒரு ஒரு பெரிய குடும்பமாக விரைவில் பார்ப்போம் என கூறியுள்ளார் இவர்.

Leave a Comment