தமிழக அரசுக்காக படம் எடுத்த எஸ்.பி.முத்துராமன்.. கடைசி படம் மட்டுமல்ல.. தோல்விப்படமும் கூட..!

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை எடுத்த எஸ்.பி.முத்துராமன் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கியவுடன் முழு ஓய்வு பெற முடிவு செய்திருந்தார். மகன்கள், மகள்கள் திருமணம் ஆகி பேரன் பேத்திகளை பார்த்து விட்ட அவர், இனிமேல் திரைப்படம் இயக்க வேண்டாம் முழு ஓய்வு எடுப்போம் என்று முடிவு செய்திருந்தார்

இந்த நிலையில் தான் அப்போது தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தொட்டில் குழந்தை என்ற திட்டத்தை கொண்டு வந்தார். குழந்தை பெற்ற பெற்றோர் அந்த குழந்தையை வளர்க்க விரும்பவில்லை அல்லது வளர்க்க முடியவில்லை என்றால், அரசு வைத்திருக்கும் தொட்டிலில் போட்டு விட்டு சென்று விடலாம் என்றும் அரசு அந்த குழந்தையை பராமரித்து வளர்க்கும் என்பதுதான் அந்த திட்டத்தின் நோக்கம்,

இந்த திட்டம் தமிழக முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக தமிழக அமைச்சர் ஒருவர் எஸ்பி முத்துராமனிடம் இந்த திட்டம் குறித்த ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

திரையரங்குகளைக் கோவிலாக மாற்றிய அம்மன் படங்கள் – ஒரு பார்வை

thottil kuzhandai

தான் திரையுலகையிலிருந்து விலகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் படம் இயக்க வேண்டுமா என்று யோசித்தார். ஆனால் அமைச்சர் விரும்பி கேட்டுக் கொண்டதற்காக ஒரே ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார். அந்த படம் தான் தொட்டில் குழந்தை. ஒரு நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இந்த படம் தோல்வியில் முடிந்தது தான் மிகப்பெரிய சோகம்.

இந்த படத்தில் ராம்கி மற்றும் ரஞ்சிதா ஜோடியாக நடித்திருந்தனர். வில்லனாக ஆனந்தராஜ் மற்றும் கரண் நடித்தனர். காமெடிக்கு ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் சில்க் ஸ்மிதாவும் இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். ஆதித்யன் இசையமைப்பில் பஞ்சு அருணாச்சலம் பாடல் வரிகளில் இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றன.

இந்த படத்தின் கதை என்னவெனில் சிறு வயதிலேயே பெற்றோரால் ஒதுக்கப்பட்டு தொட்டில் குழந்தையாக வளர்பவர் ரஞ்சிதா. அரசின் அரவணைப்பில் நன்றாக படித்து காவல்துறை அதிகாரியாக உயர்வார். அதேபோல் அவர் மாவட்ட கலெக்டர் ஆன ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொள்வார்.

டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!

thottil kuzhandai1

இந்த இருவருக்கும் தொல்லை கொடுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த வில்லன்கள் ஆனந்தராஜ் மற்றும் கரண் ஆகியோர்களின் சதியை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை

தொட்டில் குழந்தை திட்டத்தை மையப்படுத்தி பஞ்சு அருணாச்சலம் எழுதிய இந்த கதையை எஸ் பி முத்துராமன் திரைப்படமாக இயக்கினார். இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

நாடக அனுபவத்தால் தமிழ்த்திரை உலகிற்குக் கிடைத்த முத்து…! மிதமான நடிப்பில் உருக வைத்த முத்துராமன்

இருப்பினும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது ஓய்வை கூட மறந்துவிட்டு எஸ்.பி. முத்துராமன் இந்த படத்தை இயக்கினார். இந்த படமே அவருடைய கடைசி படமாக அமைந்தது.