என்னதான் பிக் பாஸ் 8 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி வருவதால் விறுவிறுப்பாக சென்றாலும் ஒரு பக்கம் வேடிக்கையான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது. இதற்கு மத்தியில், சவுந்தர்யாவை வைத்து மற்ற போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வைக்க நினைத்த செக் பற்றி தற்போது பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதால் இனி வரும் நாட்கள் போட்டியாளர்களின் வேகமும், ஆக்ரோஷமும் அதிகமாக இருக்கும் என்று தான் தெரிகிறது. என்னதான் பரபரப்பாக நிகழ்ச்சி நகர்ந்தாலும் நடுவே சில வேடிக்கையான சம்பவங்களும் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது.
சவுந்தர்யாவை வைத்து செக்..
அந்த வகையில், சமீபத்தில் நேயர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் படி ஒரு கேள்வியை பிக் பாஸ் கேட்டிருந்தது. அதாவது எந்த போட்டியாளர் அனைவருக்கும் சமைத்து கொடுக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதில் நேயர்கள் பலரும் சவுந்தர்யாவின் பெயரை தேர்வு செய்திருந்தனர். மேலும் அதில் இருந்த விதிகளின் படி மதிய உணவை அனைவருக்கும் சவுந்தர்யா சமைத்து கொடுக்க வேண்டும்.
அவருக்கென சமையலறையில் யாருமே உதவி செய்யக் கூடாது. வேண்டுமென்றால் மற்ற போட்டியாளர்கள் தூரமாக இருந்து வேடிக்கை பார்க்கலாம். இதனை கேட்டதும் அப்படியே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் சவுந்தர்யா உறைந்து போக, அவரது சமையலை கிண்டல் செய்து பேசும் முத்துக்குமரன், ‘இன்று மதியம் நான் விரதம் இருந்து கொள்கிறேன்’ என்றும் குறிப்பிடுகிறார். இப்படி பலரும் பல விதமான வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டே இருந்தனர்.
உன்ன வெளிய அனுப்பி இருக்கணும்..
இதனைத் தொடர்ந்து தனியாளாக மதிய உணவை சவுந்தர்யாவும் தயார் செய்திருந்தார். இதனை சாப்பிட்ட ஜாக்குலின், ‘எப்படிடா இதை சாப்பிடுறீங்க?’ என்றும் கிண்டல் செய்கிறார். தொடர்ந்து முத்து உள்ளிட்ட சிலர், ‘சவுந்தர்யா, நீயும் இதை டெஸ்ட் பண்ணு’ என்றும் கூறுகின்றனர்.
தொடர்ந்து சவுந்தர்யா சாப்பிட மாட்டேன் என கூறியதும், ‘இந்த பொண்ணு சாப்பிடாம தப்பிக்க பாக்குது’ என்றும் முத்து தெரிவிக்கிறார். இதே போல, தீபக்கும் கேமராவை பார்த்து, “தயவு செய்து இனிமேல் இப்படி எங்களை சோதிக்காதீர்கள். எங்களால் முடியவில்லை. ஆனால் நன்றாக இருக்கிறது. வேறு வழி இல்லை” என்றும் கிண்டல் அடிக்கிறார். அதே நேரத்தில் நெய் சேர்த்தால் இன்றும் நன்றாக இருப்பதாகவும் பலர் குறிப்பிடுகின்றனர்.
அப்போது, தான் வைத்த புளி குழம்பை சாப்பிட்ட சவுந்தர்யா, ‘இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டிருக்க வேண்டுமோ?’ என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் முத்துக்குமரன், ‘போன வாரம் எலிமினேஷன்ல உன்ன போட்டிருக்கணும்’ என்கிறார். இதன் பின்னர் பேசும் சவுந்தர்யா, “நல்ல வேளை. யாரும் இந்த வாரம் என்னை நாமினேட் செய்யவ்விலை. ஒரு வேளை என் உணவை சாப்பிட்ட பின்னர் நாமினேஷன் வைத்திருந்தால் எனது பெயரை தான் அனைவ்ரும் சொல்லி இருப்பார்கள்” என்றும் வேடிக்கையாக தெரிவிக்கிறார்.