தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து அடுத்தது உடனடியாக சிவகார்த்திகேயன் படம் பண்ண போகிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தான் வெங்கட் பிரபு அனிருத்துடன் இணைந்து வேலை செய்யப் போகிறார். மேலும் இது சயின்ஸ் பிக்சன் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்பது போல புதுமையான பல விஷயங்கள் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவுகிறது.