பொழுதுபோக்கு

என்ன விமர்சனம் வந்தாலும் சிவகார்த்திகேயன் அண்ணா இந்த விஷயத்தை நிறுத்தமாட்டாரு… மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தவுடன் சிவகார்த்திகேயன் அண்ணா என்னை கூப்பிட்டு பாராட்டினார். ஆனால் அதை பலர் வேறுவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். என்னைப் போன்ற புது இயக்குனர்களை அவரைப் போன்ற ஒரு ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர்கள் பாராட்டும் போது எங்களுக்கு அது ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது. அது ரொம்ப நல்ல விஷயம். அதை விமர்சனம் செய்வதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் எத்தனை விமர்சனம் வந்தாலும் சிவகார்த்திகேயன் அண்ணா திறமையானவர்களை பாராட்டுவதை நிறுத்தவே மாட்டார் என்று பகிர்ந்து இருக்கிறார் அபிஷன் ஜீவிந்த்.

Avatar photo
Meena