சுகாசினி என்னும் இயற்பெய்ர கொண்ட சினேகா தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்ததன்மூலம் தென் இந்திய நடிகையாக வலம் வருகின்றார். இவரது சிரிப்பிற்கே பல கோரி ரசிகர்கள் உண்டு, புன்னகை அரசி என்ரு செல்லமாக அழைக்கப்படும் சினேகா சினிமாத் துறையில் 19 ஆண்டுகளாக இருந்துவருகிறார்.
நீலப்பக்சி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சினேகா, தமிழ் சினிமாவிலேயே நன்றாக ஜொலித்தார். இதுவரை 75 படங்களில் நடித்துள்ளார். சினிமாத் துறையில் பிரபலமான சூர்யா- ஜோதிகா, அஜித்- ஷாலினி ஜோடியினைத் தொடர்ந்து சினேகா பிரசன்னாவைத் திருமணம் செய்வதாக அறிவித்தார்.

புகழின் உச்சியில் இருந்த சினேகா பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்யப் போவதாக அறிவிக்கையில் பலருக்கும் அது ஷாக்காக இருந்தது.
திருமணத்திற்குப் பின்னரும் சினேகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர அவர் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் பிரசன்னாவுக்கும் சிறப்பான சினிமா எதிர்காலம் அமைய, அவரும் பிரபலமான ஹீரோவாக ஆகிவிட்டார்.
இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார், இந்தநிலையில் இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
நேற்று இந்த பிரபல ஜோடி தங்களது 8 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். மேலும் சினேகா தனது முதலாம் ஆண்டு திருமணநாள் புகைப்படத்தினைப் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.