கன்னியமா வந்த மார்க் ஆண்டனி பட ட்ரெய்லர்… கேமியோ ரோலில் சில்க் ஸ்மிதா

Published:

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டைம் ட்ராவலை மையமாகக் கொண்ட காமெடி ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கு ஸ்டார் சுனில் குமார், நடிகை அபிநயா, இயக்குநர் செல்வராகவன், காமெடியன் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

‘என்னாபா ரெடியா? ரெக்கார்ட் பண்ணிக்க’ என்று நடிகர் கார்த்தியின் குரலில் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘கேங்ஸ்டருக்கு கன்னியம் தான் முக்கியம் பொம்பள சோக்கு கேட்குதா’ ப்ளே பாய் மவனே என்ற வசனங்கள் கவரும்படி உள்ளன. இளைஞர்களை கவரும் அடல்ட் காமெடி நிறைந்த படமாக த்ரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிநடை போட்டது. அதே பாணியில் மார்க் ஆண்டனி படமும் அடல்ட் ப்ளேவரில் டைம் டிராவலை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக விருந்து படைக்க உள்ளது.

விஞ்ஞானியான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிப்பது போன்று ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. குறிப்பாக 80களில் மிகப்பெரிய கேங்ஸ்டர்களாக எஸ்.ஜே.சூர்யா, விஷால்,வருகின்றனர். தற்காலத்திலிருந்து கடந்தகாலத்துக்கு போன் செய்து பேசுவதால் வரும் சிக்கல்களே படத்தின் மையக்கரு என்பது போல் தெரிகிறது. நான் வில்லன் எப்போதுமே வில்லனாக இருப்பேன் என மாஸான வசனத்தை விஷால் பேசியுள்ளார்.

அதுவும் 80களில் ஆடை பாதி ஆள் பாதியாய் இளசுகளை கிறங்கடித்த நடிகை சில்க் ஸ்மிதாவின் கேமியோ ரோல் பட்டையை கிளப்புகிறது. சில்க் ஸ்மிதா வரும் காட்சியில் ஹார்ட் பீட் எகிறுவது போல் அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடல் ஒலிக்கிறது. படத்தில் தான் வசியம் செய்வார்கள், ஆனால் ட்ரெய்லரில் ஆதிக் ரவிச்சந்திரன் வசியம் வைத்துவிட்டார் என ரசிகர்கள் பேசும் அளவிற்கு மார்க் ஆண்டனி பட ட்ரெய்ல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னும் ரசனையை கூட்டும் விதமா ‘பஞ்சு மிட்டாய் சீலகட்டி’ பாடல்கள் ரகளை செய்கின்றன. இந்த ட்ரைலர் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன், கலந்து வெளியாகியிருப்பதால் விஷால் கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைம் டிராவல் படம் என்றால் கொஞ்சம் சீரியஸா இருக்கும் என்ற பாணியை உடைத்து காமெடி ட்ராக்கை பிடித்திருப்பது போல் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் டைம் டிராவல் படங்கள்

விதியை மதியால் வெல்பவர்களை இந்த உலகம் போற்றி மதிக்கும். ஆனால், நம் வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா? இது நடந்தா நல்லா இருக்கும்ல என்ற மைன்ட் வாய்ஸ் வசனங்களும் நம் ஆழ் மனதில் உதிர்த்துவிடும். கடந்த காலத்திற்கு சென்று நடந்த ஒன்றை மாற்ற வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவோமோ டைம் மிஷினை தேய்ச்சு எடுத்துடுவோம்ல.

தமிழ்ப் படங்களில் டைம் டிராவல் குறித்து ரவிக்குமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’, விக்ரம் குமார் இயக்கிய 24 திரைப்படமும் நல்ல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். இந்த பட காட்சிகளையோ, சிஜியை பார்த்தால் இது அந்த படத்தில் ஏற்கனவே பார்த்துவிட்டோம் என்பதை கண்டுபிடிப்பது சுலபம். தமிழ் ரசிகர்களின் ரசனையை மாற்றுவது என்பது தான் முயற்சி, அதில் இப்படங்கள் வெற்றி இலக்கை அடைந்து விட்டது என்றே கூறலாம். ஹாலிவுட் படங்களை காணும்போது தமிழ் படங்களின் சாயல் ஒரு சில காட்சிகளில் காண முடிகிறது.

டைம் லூப் படமாக வெளிவந்த மாநாடு திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு படமாக வெற்றி வாகை சூடியது. அதேபோன்று ஓ மை கடவுளே திரைப்படம் காதல் கதையாக இருந்தாலும், அந்த எல்லையை மீறாமல் கடவுளாக காண்பிக்கும் காட்சியை தள்ளி வைத்து விட்டு டைம் டிராவலாக பார்த்தால் பீல் குட் படமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் டைம் டிராவல் மூலம் தாக்கங்களை ஏற்படுத்திய படங்களின் வரிசை குறைவு தான். அதில் கிடைக்கும் அனுபவங்களை நாம் அனுபவிக்க கத்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் உங்களுக்காக...