ஒரு மொழி உணர்வு படத்தை மொழி உணர்வே இல்லாதவர் இயக்கினால் எப்படி இருக்கும்? அது தான் ‘பராசக்தி’.. டைட்டிலில் மட்டும் தான் தீ பரவுது.. திரையில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.. இதெல்லாம் மணிரத்னம், பாலசந்தர் போன்றவர்கள் எடுக்க வேண்டிய படம்.. சுதா கொங்கராவுக்கு தமிழே தெரியாது.. தமிழ் உணர்வு பற்றி என்ன தெரியும்?

60-களின் மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து, ரத்தமும் சதையுமா வர வேண்டிய படத்தை, ஏதோ பிளாஸ்டிக் பொம்மை போல சுதா கொங்கரா செதுக்கியிருப்பது தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ‘சினிமா காமெடி’. சிவகார்த்திகேயன் இந்த…

parasakthi 1

60-களின் மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து, ரத்தமும் சதையுமா வர வேண்டிய படத்தை, ஏதோ பிளாஸ்டிக் பொம்மை போல சுதா கொங்கரா செதுக்கியிருப்பது தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ‘சினிமா காமெடி’.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு மாணவர் போராட்ட வீரர். கால ஓட்டத்தில் ஹிந்தி கற்றுக்கொண்டு சென்ட்ரல் கவர்மெண்ட் வேலைக்குச் செல்பவர். எஸ்கே-விடம் நாம் எதிர்பார்ப்பது அந்த எள்ளல் கலந்த டைமிங் காமெடி தான். ஆனால், இதில் ‘சீரியஸ்’ ஹீரோவாக அவர் படும் அவஸ்தை பார்க்க பாவமாக இருக்கிறது. அவருக்கு இந்த கேரக்டர் ஒரு ‘டெய்லர் மேட்’ சட்டையே கிடையாது, ஏதோ பக்கத்து வீட்டுக்காரரின் சட்டையை வாங்கி போட்டது போல தளர்வாக இருக்கிறது. அழ வேண்டிய காட்சிகளில் எல்லாம் அவர் அழுதாரா இல்லை நமக்கு அழுகை வருகிறதா என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. ‘லகரம்’ உச்சரிக்கத் தெரியாத ஒரு காஸ்டிங்கை வைத்துக்கொண்டு மொழி போராட்டப் படம் எடுப்பதெல்லாம் ஒரு ‘கிரிஞ்ச்’ ரகம்.

இந்த படத்தில் நிஜமாகவே ஸ்கோர் செய்தது ரவி மோகன் தான். ஹிந்தி தாய், தமிழ் தந்தை என இரு பக்கமும் சிக்கிக்கொண்டு அவர் காட்டும் அந்த வெறுப்பு, தமிழ் சினிமா வில்லன்களின் வரிசையில் ஒரு நல்ல முயற்சி. அவருடைய கேரக்டர் நம்மை இரிடேட் செய்கிறது என்றால், அவர் ஒரு சிறந்த நடிகராக வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் அர்த்தம்.

அறிஞர் அண்ணாவாக சேத்தன், கருணாநிதியாக குரு சோமசுந்தரம் என பெரிய லிஸ்டே இருக்கிறது. ஆனால், அண்ணாவை காட்ட வெறும் பல்லில் கரையும், ஒரு கண்ணாடி மேக்கப்பும் போதும் என்று சுதா கொங்கரா முடிவு செய்தது தான் வரலாற்று சோகம். நிஜ தலைவர்களை காட்டும்போது ஒரு ‘எலிவேஷன்’ வேண்டாமா? ஏதோ ஸ்கூல் டிராமா மேக்கப் போட்டு உட்கார வைத்தது போல இருக்கிறது. அதிலும் குரு சோமசுந்தரம் போன்ற ஒரு மகா நடிகரை வைத்துக்கொண்டு, கருணாநிதியின் அந்த தீப்பொறி வசனங்களைக்கூட சரியாக பயன்படுத்தத் தவறியது இயக்குநரின் தோல்வியே தவிர நடிகரின் தோல்வி அல்ல.

படத்தின் செகண்ட் ஹாஃப் நிஜமாகவே நம் பொறுமையை சோதிக்கிறது. மொழி போராட்டத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஆட்கள் வந்து உதவி செய்வதாக காட்டியது ‘கிரிஞ்ச்’ உச்சம். “ஆந்திராவிலிருந்து வருகிறேன், பெங்களூரிலிருந்து வருகிறேன், என இவர்கள் காட்டும் சகோதரத்துவம் உணர்வை தூண்டாமல், சிரிப்பை தான் தூண்டுகிறது. 250 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள், ஆனால் திரையில் தெரிவதெல்லாம் அட்டைப்பெட்டியால் ஆன பிளாஸ்டிக் செட்கள் தான். மதராசபட்டினம் படத்தில் தெரிந்த அந்த நேர்த்தி இதில் துளி கூட இல்லை.

சுதா கொங்கராவுக்கு இந்தப் படத்தின் சப்ஜெக்ட்டுக்கும் துளி கூட ஒட்டவில்லை. தமிழே தெரியாத அவரால் எப்படி தமிழ் உணர்வுள்ள ஒரு சம்பவத்தை படமாக்க முடியும்? ஜி.வி. பிரகாஷின் இசை மட்டுமே இந்த படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடிக்கிறது. பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசையில் ஜி.வி. பிரித்து மேய்ந்துவிட்டார். ‘ஜனநாயகன்’ தள்ளிப்போன லக்கினால் இந்த படம் தப்பித்திருக்கலாம், ஆனால் மொழி போராட்டத்தின் ஆழம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்.

ஒன்லைன் விமர்சனம்: பராசக்தி – இது ‘தீ’ அல்ல, வெறும் ‘புகை’ தான்!