அடுத்தடுத்து பல தடைகள் உடைத்தெறிந்த சிவாஜியின் அம்பிகாபதி திரைப்படம்!

Published:

1937 இல் பிரபல அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கல் அவர்களின் இயக்கத்தில் தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான படம் தான் அம்பிகாபதி. இந்த படத்தை 20 வருடங்களுக்குப் பிறகு தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் தயாரிப்பாளர் ஏ. எல் சீனிவாசன். படத்தில் அம்பிகாபதியாக நடிக்க நடிகர்கள் சிவாஜிகணேசனும், அமராவதியாக நடிக்க பானுமதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சிவாஜியின் அப்பாவாக அதாவது கம்பராக நடிக்க தியாகராஜ பாகவதர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்திற்கு பாடல்கள், வசனம் போன்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார் பாரதிதாசன். இந்த பாடத்திற்கு ராமநாதன் இசையமைக்க, ப. நீலகண்டன் படத்தை இயக்கினார்.

சிவாஜியை தொடர்ந்து படத்தில் கலைவாணன், என்.எஸ் கிருஷ்ணன், டி எம் மதுரம், நம்பியார், நாகையா, டி. எஸ். பாலையா, எம். ஆர். சந்தானலட்சுமி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார்கள். அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு பிரச்சனையும் துவங்கியது.

பாகவதர் அப்போது நிறைய கடன் சுமையில் இருந்தார். அவருக்கு உதவி வேண்டும் என்று கே ஆர் ராமசாமி, டி.வி நாராயணசாமி இருவரும் தயாரிப்பாளரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். பாகவதரை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும். அதற்கு அதிக சம்பளம் அதாவது கதாநாயகனை விட தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு தயாரிப்பாளர் அப்படி செய்தால் சிவாஜி என்ன நினைப்பார் என்று யோசித்தார்.

ஆனால் இந்த தகவலை அறிந்த சிவாஜி உண்மையில் மகிழ்ந்தார். இதன் மூலம் கிடைக்கும் தொகை பாகவதருக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தனர். அந்த நேரத்தில் பாகவதர் படத்தில் நடிக்க மறுத்து வாங்கிய முன் தொகையை ஏ. எல் சீனிவாசனிடம் வழங்கினார். சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க பாகவதர் மறுத்துவிட்டார் என்ற செய்தி அனைத்து இடங்களுக்கும் பரவியது.

இந்த தகவல் சிவாஜிக்கு மிகவும் வருத்தம் தந்தது, மேலும் நடிக்க மறுத்தாலும் பரவாயில்லை வாங்கிய முன் பணத்தை திருப்பி தர வேண்டாம் அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் தயாரிப்பாளர் ஏ என் சீனிவாசன். கலைவாணர் அவர்கள் பாகவதரிடம் படத்தில் நடிக்க மறுத்தது குறித்தது கேட்டார்.

அதற்கு பாகவதர் நான் சிவாஜியின் அப்பாவாக நடிப்பதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் நான் எந்த சூழ்நிலையிலும் அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க மாட்டேன். அதற்கு காரணம் நான் அம்பிகாபதியாகவே என் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறேன் என உணர்வு பூர்வமாக கூறினார். கம்பர் வேடத்தில் நடிக்க எம் கே ராதா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் மூலம் நடிகர்கள் பிரச்சனை முடிந்த நிலையில் அடுத்த பிரச்சனை துவங்கியது. தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசன் அவர்களின் உடன் பிறந்த தம்பி தான் கண்ணதாசன், முதலில் இந்த படத்தில் கண்ணதாசன் இடம்பெறும் நிலை அப்போது இல்லை. அம்பிகாபதி படத்திற்கு வசனம் எழுத வேண்டும் என்பதற்காக புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களை தன் சொந்த செலவில் புதுச்சேரிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட ஹோட்டலில் தங்க வைத்து தன் அண்ணன் கே எல் சீனிவாசருக்கு அறிமுகம் செய்து வைத்தார் கண்ணதாசன்.

ஆனால் புரட்சி கலைஞர் பாரதிதாசன் குறித்து பல குற்றச்சாட்டுகளை கண்ணதாசனின் ஆதரவாளர்கள் முன் வைத்தனர். பொதுவாக பாரதிதாசன் எப்போதும் மிகவும் இறுக்கமாக இருப்பவர். மேலும் இயக்குனர் பா நீலகண்டன் அவர்களுடன் கருத்து வேறுபாடும் ஏற்பட இந்த படத்தில் இருந்து பாரதிதாசன் விலகிக் கொண்டார்.

இதனால் ஏ எல் சீனிவாசன் அவர்கள் பாரதிதாசனுக்கு ஈடு கொடுக்கும் விதமாக ஐந்து நபர்களிடம் திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.பா நீலகண்டன், கவிஞர் கண்ணதாசன், லட்சுமணன், சக்தி கிருஷ்ணசாமி, சின்ன அண்ணாமலை ஆகியோரிடம் அந்த பொறுப்பு வந்து சேர்ந்தது.

பாடல்கள் எழுத கவிஞர்கள் பட்டாளம் தனி என ஒரு வழியாக அம்பிகாபதி திரைப்படம் வளர்ந்து வந்த நிலையில் வி. ராமமூர்த்தி ஒளிப்பதிவில் கருப்பு வெள்ளையில் படம் உருவாகி வரும் நிலையில் கலர் படங்கள் யுக்தி பரவலாக பேசப்பட துவங்கியது. ஒளிப்பதிவாளர் பி ராமமூர்த்தி ஆலோசனையின் பெயரில் திரைப்பட ஒளிப்பதிவு மேதை ஆர் சுப்பாராவ் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு பாடல்களை கலர் படமாக எடுக்க முடிவு செய்தனர்.

இசையரசன் டி எம் சௌந்தரராஜன் குரல் வளத்தால் இந்தப் படத்தின் பாடல்கள் புகழ் உச்சியை தொட்டது. படம் வளர்ந்து வரும் நிலையில் மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் நடந்தது.பாதி படத்தில் நடித்து வந்த கலைவாணர் அவர்கள் இறந்து போனார். ஆனால் அம்பிகாபதி படத்தில் கலைவாணன் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் மீது இருந்த நிலையில் ஆனால் அதற்காக ஏ எல் சீனிவாசன் அவர்கள் கவலைப்படவில்லை நல்ல நண்பரை இழந்து விட்டோம் என வருத்தம் கொண்டார்.

விஜய்க்கு போட்டியாக அஜித் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்!

மறைந்த கலைவாணனுக்கு ஒரு சிலை அமைத்து ஊர் மக்கள் அவரை வணங்குவது போன்ற காட்சிகளை அமராவதி படத்தில் அமைக்கப்பட்டது. என் எஸ் கிருஷ்ணன், ஏ எல் எஸ் சீனிவாசன் அவர்களுக்கு அந்த நேரத்தில் ரூபாய் மூன்று லட்சத்து 70 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டி இருந்தது.

கலைவாணர் இறந்த பிறகு அந்த பணத்தை தள்ளுபடி செய்து உதவும் படி தென்னிந்திய நடிகர் சங்கம் சீனிவாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த கடிதம் கிடைத்த மறு நிமிடமே என் எஸ் கிருஷ்ணனிடம் இருந்து எங்களுக்கு வர வேண்டிய தொகை முழுவதையும் தள்ளுபடி செய்து கணக்கை முடித்து விட்டோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம் என்று மறுபடியும் எழுதி அனுப்பினார் ஏ எல் எஸ் சீனிவாசன்.

இப்படி பல தடைகளை முறியடித்து வெளியாகிய திரைப்படம் தான் அம்பிகாபதி 1957ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

மேலும் உங்களுக்காக...