ஒரே ஆண்டில் 9 படங்கள்… 3 படங்களில் ஒரே இயக்குனர்.. சிவாஜியின் சாதனை..!

By Bala Siva

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 60கள் மற்றும் 70களில் மிகவும் பிசியாக இருந்தார்.  அவரது படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் வெளியாகிவிடும். ஒரே மாதத்தில் 8 படங்கள், 9 படங்கள், 10 படங்கள் என்பதெல்லாம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாவது சர்வ சாதாரணமாக இருந்தது. அந்த வகையில் கடந்த 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் எட்டு படங்களில் நடித்தார்.  அவற்றில் மூன்று படங்கள் ஒரே இயக்குனர் இயக்கத்தில் வெளியான படங்கள் என்பது ஆச்சரியமான தகவல் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 3 கால்ஷீட்டுகளில் நடிப்பார்.  காலை ஏழு மணி முதல் இரவு 12 மணி வரை நடித்த காலமும் உண்டு. நடிப்பு நடிப்பு என இருந்ததால் குடும்பத்தை அவரது மனைவிதான் பொறுப்பாக பார்த்துக் கொண்டதாகவும் சிவாஜி கணேசன் பல நேரங்களில் பேட்டி கொடுத்து இருந்தார்.

சிவாஜி நடித்த கவரிமான்…. கதாநாயகிக்கு டூப் வைத்து எடுத்த இயக்குனர்.. திரையில் பார்த்து அசந்து போன படக்குழு..!

இளமைக் காலத்தில் முழுவதுமாக தான் தொழில் நடிப்பு என்று இருந்து விட்டதாகவும் அப்போது தனது குடும்பத்தை தான் மிகவும் மிஸ் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் அன்பளிப்பு, தங்க சுரங்கம், காவல் தெய்வம், குருதட்சனை, அஞ்சல் பெட்டி 520, நிறைகுடம், தெய்வமகன், திருடன் மற்றும் சிவந்தமண் ஆகிய 9 படங்கள் வெளியானது.

இவற்றில் அன்பளிப்பு, திருடன், தெய்வமகன் ஆகிய மூன்று படங்களையும் ஏசி திருவலோகசந்தர் இயக்கியிருந்தார் என்பது ஆச்சரியமான தகவல். ஒரு நாயகனை வைத்து ஒரு வருடத்தில் ஒரு படம் எடுப்பதே தற்போது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் நிலையில் ஒரே நாயகனை வைத்து மூன்று படங்கள் ஒரு இயக்குனர் இயக்கியிருந்தது பெரும் ஆச்சரியம் தான்.

சிவாஜி – ரஜினி இணைந்த முதல் படமே தோல்வி படமா..? இதுதான் காரணமா..?

1969ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் தங்கச்சுரங்கம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சீரியசான கதை சொல்லும் குரு தட்சனை, காமெடியான கதை அம்சம் கொண்ட அஞ்சல் பெட்டி 520, ஆரம்பத்தில் காமெடியாகவும் அதன் பிறகு சீரியஸாகவும் கதை அம்சம் கொண்ட நிறைகுடம், 3 வேடங்களில் நடித்து ஆஸ்கார் விருது வரை சென்ற தெய்வமகன் ஆகிய திரைப்படங்களும் 1969ல் தான் வெளியானது.

அதேபோல் 1970 ஆம் ஆண்டுகளில் அவர் 9 படங்களில் நடித்திருந்தார். 79 ஆம் ஆண்டில் பத்து படங்களில் நடித்திருந்தார்.  ஆனால் ஒரே இயக்குனர் சிவாஜியின் 3 படங்களை ஒரே ஆண்டில் இயக்கியது 1969 ஆம்  ஆண்டு தான்.

சிவாஜியை விட அதிக சம்பளம்… நிபந்தனையுடன் நடித்த சந்திரபாபு… எவ்வளவு வாங்கினார் தெரியுமா…?

அதேபோல் சிவாஜி கணேசன் 1982 ஆம் ஆண்டு அவர் 13 படங்களில் நடித்து சாதனை செய்தார். ஒரு மாதத்திற்கு ஒரு திரைப்படத்தை விட அதிகம் . 1984 ஆம் ஆண்டு 10 படங்களும், 85 ஆம் ஆண்டு 8 படங்களும், 87 ஆம் ஆண்டு 10 படங்களும் அவர் நடித்திருந்தார். 1988 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.