Siragadikka Aasai: சத்யாவை கடத்திய சிட்டி.. முத்து, மீனா பார்க்கும் சி.ஐ.டி வேலை.. விறுவிறுப்பான எபிசோட்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் மனோஜை பார்க்க அவரது பார்க் நண்பர் வருகிறார். அவர் மனோஜை பார்த்து, “கடை ஏன் இப்படி வெறிச்சோடி இருக்கிறது?” என்று…

sa1 2

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் மனோஜை பார்க்க அவரது பார்க் நண்பர் வருகிறார். அவர் மனோஜை பார்த்து, “கடை ஏன் இப்படி வெறிச்சோடி இருக்கிறது?” என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், “சில நாட்களாக வியாபாரம் இல்லை,” என்று பதிலளிக்கிறார்.

அப்போது ரோகிணி கடைக்கு வந்து, மனோஜிடம் தனியாக பேச வேண்டுமெனக் கூற, “உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியாது. ஏன் என்னை தவிர்க்கிறாய்? நான் சொன்னது பொய்தான். ஆனால் அனைத்தும் உன்னுடைய நலனுக்காகத்தான் சொன்னேன் . நான் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நான் பொய் சொல்லவில்லை,” என்று கூறுகிறார்.

அதற்கு மனோஜ், “பொய் சொல்பவர்கள் எல்லோரும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். நீ எதற்காக இங்கே வந்தாய்? நீ வந்தது தெரிந்தால் அம்மா என்னை திட்டுவார்கள்,” என்கிறார். அதற்கு ரோகிணி, “அப்போ உனக்கு என்னை விட உன் அம்மாதான் முக்கியமா?” என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்தநிலையில், முத்து மற்றும் மீனா ரொமான்ஸ் ஆக பேசிக்கொண்டிருக்கும் போது, சீதா, முத்துவுக்கு போன் செய்கிறார். “தம்பி சத்யா இரவு முதல் காணவில்லை,” என்ற தகவலால், முத்து அதிர்ச்சி அடைகிறார். முத்து, “இது சிட்டியின் வேலையாக இருக்கலாம். நீ கவலைப்படாதே. நான் சத்யாவை கண்டுபிடித்து கூட்டி வருகிறேன்,” என்று உறுதியளிக்கிறார். மேலும், “உன் அம்மாவிடமும் அக்காவிடமும் சொல்ல வேண்டாம்; அவர்கள் பயப்படுவார்கள்,” என்கிறார்.

பின்னர், செல்வத்தை அழைத்து, இருவரும் பைக்கில் சத்யாவை தேடி செல்கிறார்கள். சத்யா வேலை பார்க்கும் இடத்திலும் விசாரணை நடத்துகிறார்கள். அதன் பிறகு, சத்யாவின் வண்டியை கண்டுபிடித்து, அந்த இடத்திற்கு அருகில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை தரும்படி கேட்கிறார்கள். ஆனால் கடை ஓனர் முடியாது என மறுக்கிறார். அப்போது மீனா வருகிறார். முத்து முழு விவரங்களையும் மீனாவிடம் கூறுகிறார். மீனா, “இந்த கடை ஓனர் எனக்குத் தெரிந்தவர்,” என கூறி, அவரிடம் பேசிக் சிசிடிவி காட்சிகளை பார்க்க அனுமதி பெறுகிறார்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்ப்பது மூலம், சத்யா அந்த கடையின் எதிரில் வண்டியை நிறுத்தும் போது ஒரு வேன் வந்து சத்யாவுடன் தகராறு செய்து, அவரை கடத்துவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதை பார்த்து, மீனாவும் முத்துவும் அதிர்ச்சியடைகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.