அதேபோல், சீதாவை பார்க்க டிராஃபிக் போலீசான அருண் பொன்னியம்மன் கோவிலுக்கு வருகிறார். அருணை பார்த்ததும் அதிர்ச்சி அடையும் சீதா, “இங்கே எதற்காக வந்தீர்கள்? அம்மா பார்த்தால் பிரச்சனையாகிவிடும்,” என்று கூறுகிறார். அதற்கு அருண், “பார்க்கட்டும், நானே உன் அம்மாவிடம் என் காதலை சொல்லுகிறேன். நீ ஓகே சொல்லிவிட்டால் உடனே என் அம்மாவை திருமணத்திற்கு பேச அழைத்து வந்து விடுவேன்,” என்கிறார்.
“அதெல்லாம் வேண்டாம். என்னுடைய அக்கா, மாமா பார்த்தால் பிரச்சனையாகிவிடும்.” என்று சீதா சொல்ல, அதற்கு அருண், “என்ன பிரச்சினையாகும்? என்று கேட்க, உடனே கல்யாணம் பண்ணி வச்சிருவார்கள்,” என சீதா பதிலளிக்க, “அப்படி என்றால் முதலில் நான் அவர்களை தான் பார்க்க வேண்டும்,” என்று அருண் கூறுகிறார். சீதா “இப்போது வேண்டாம், கொஞ்ச நாளாக பழகலாம். அதன் பின்னர் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்,” என்று கூறி அருணை அனுப்பி வைக்கிறார்.
இந்த நிலையில், முத்து மற்றும் முருகன் கோவிலுக்கு வர, அருண் அவர்களை பார்த்துவிடுகிறார். ஏற்கனவே முருகனுக்கு அருணை தெரியும் என்பதால், அருணிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அதன்பின் முத்து, அருண் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்கின்றனர். இதையடுத்து, முருகனை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் முத்து, மீனாவை பார்க்கும்போது, மீனாவும் சீதாவும் முருகனை கேலி செய்யும் காட்சிகளும் உள்ளன.
பின்னர், முருகன் கோவிலுக்குள் சாமி கும்பிட செல்கிறார். அதன்பிறகு, மீனா முத்துவிடம், “இன்னும் நீங்கள் காதலுக்கு ஐடியா சொல்வதை நிறுத்தவில்லையா?” என்று கேட்கிறார். அதற்கு முத்து, “ஒரு நல்ல விஷயம் நடந்தால் நல்லதுதானே?” என்று பதிலளிக்கிறார்.
இந்த நிலையில், மனோஜை தேடி ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் வருகிறார். அவர், “உங்கள் பெயரில் உங்கள் மனைவி ரோகினி தான் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார். கணவன், மனைவியுடன் சேர்ந்து இன்சூரன்ஸ் எடுக்க சொன்னேன். ஆனால், ‘என்னுடைய கணவருக்கு மட்டும் ஒரு பாலிசி போதும்’ என்று ரோகிணி சொன்னதாக கூற இதை கேட்டு, ரோகிணியின் அன்பை நினைத்து மனோஜ் உருகுகிறார்.
அதேபோல், “மருந்தீஸ்வரர் கோயிலில் உங்களுக்காக ரோகிணி அர்ச்சனை செய்யச் சொன்னார்,” என்று ஒருவர் பிரசாதங்களை கொடுக்க, அப்போதும் ரோகிணியின் பாசத்தை நினைத்து ஏங்கும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஏற்கனவே இரண்டு முறை காட்டப்பட்ட கிச்சனில் ரோகிணி சமையல் செய்யும் காட்சி, இன்றைய எபிசோடில் “நாளைய காட்சி” என்ற பகுதியில் ஒளிபரப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.