விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியல் இன்றைய எபிசோடில், ‘சத்யாவை காப்பாற்றிய முத்து, மீனாவிடம் நடந்ததை சொல்கிறார். அதன் பிறகு சத்யாவும் நடந்ததை சொல்லி, “மாமா தான் என்னை சரியான நேரத்தில் வந்து காப்பாற்றினார். நீயும் அம்மாவுக்கு கவலைப்பட வேண்டாம்,” என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் அருண், சீதாவுக்கு போன் செய்து, “உன் தம்பி காப்பாற்றப்பட்டு விட்டார். சரியான நேரத்தில் போலீஸ் சிட்டியை கைது செய்து விட்டார்கள். ஆனால் அதற்கு முன் உன் மாமா அந்த இடத்திற்கு சென்று சிட்டியை அடித்து போட்டு விட்டார்,” என்று சொல்ல, சீதா மகிழ்ச்சி அடைந்து, “நான்தான் சொன்னேனே என் மாமா எப்படியும் காப்பாற்றி விடுவார்,” என்று சொல்கிறார்.
அப்போது, “ஆமா, உன் மாமா ரொம்ப நல்லவராக தான் இருக்கிறார். மனைவியின் குடும்பத்தின் மேல் இப்படி ஒரு பாசம் வைத்திருப்பவர் உண்மையிலேயே நல்ல மனிதர் தான்,” என்று கூற, அதற்கு “ஆமாம், என் மாமா ரொம்ப நல்லவர்,” என்கிறார்.
கொஞ்சம் இதனை அடுத்து, விஜயாவிடம் வரும் ரோகிணி, “இன்று நான் சம்பாதித்த பணம் ₹20,000,” என்று கொடுக்க, “என்னை கேலி செய்கிறாயா? நான் ஒன்றும் பணப்பேய் அல்ல. இந்த பணம் எனக்கு தேவையில்லை,” என்று கூறுகிறார். ஆனால் அதன்பின் மனோஜ் அங்கு வந்து, “ரோகிணி விருப்பத்துடன் தானே கொடுக்கிறாள், அதனால் வாங்கிக் கொள்ளுங்கள்,” என்று சொல்ல, “உனக்காக வாங்கிக் கொள்கிறேன்,” என்று விஜயா வாங்கி கொள்கிறார்.
அப்போது அண்ணாமலை, “இதெல்லாம் தப்பு. உனக்குத்தான் ரோகிணியை பிடிக்கவில்லையே. இப்பொழுது எதற்கு பணம் வாங்குகிறாய்? சரி, பணம் வாங்கி விட்டாய் அல்லவா, இனிமேலாவது அவள் செய்த தப்பை மன்னித்து அவளிடம் இயல்பாக பேசு,” என்று கூறுகிறார்.
“அதெல்லாம் முடியாது. அவள் என்னை ஏமாற்றி இருக்கிறார். ஏமாற்றுவதற்காக தண்டனை தான். நீதிமன்றத்தில் தப்பு செய்தால் ஃபைன் கட்டுவார்களே? அதுபோல் ரோகிணி எனக்கு ஃபைன் கட்ட வேண்டும்,” என்று கூறி, ஆனால் அதே நேரத்தில், “நான் பணப்பேய் அல்ல.” என்று கூறுகிறார். அப்போது ஸ்ருதி, “அப்படியானால் நீங்கள் என்ன பேய்? என்று கேட்க, விஜயா அவரை முறைக்கிறார்.
இந்த நேரத்தில் மீனா வீட்டுக்கு வந்து, “என்னுடைய தம்பி டிகிரி படித்து முடித்துள்ளார். நல்ல விஷயம் நடந்துள்ளது,” என்று சாக்லேட் கொடுக்கிறார். எல்லோரும் சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார்கள். விஜயா மட்டும், “அவன் என்ன ஐஏஎஸ் படிச்சிட்டு வந்திருக்கிறானா?” என்று கூறி சாக்லேட் வாங்க மறுத்துவிடுகிறார்.
இதனை அடுத்து முத்து மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்கும்போது, முத்து, “அந்த லொகேஷன் சீதாவுக்கு வழங்கியது யார்?” என்று கேட்க, “தெரியவில்லை யார் என, நான் கேட்டு சொல்கிறேன்,” என்று வீணாவிடம் கூறுகிறார்.
இந்த நிலையில், சீதா மற்றும் அவருடைய அம்மா அருண் வீட்டிற்கு சென்று, அருண் தாயாரிடம் தங்களது நன்றியை தெரிவிக்கின்றனர். “உங்கள் பையன் தான் சரியான நேரத்தில் என்னுடைய பையனை காப்பாற்ற உதவினார்,” என்று சீதா அம்மா கூற, அருண் சந்தோஷப்படுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
நாளைய எபிசோட்டில், மீனாவுக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது. அதற்கு முன்பாக இரண்டு லட்ச ரூபாய் வழங்க வேண்டும். “அதனால் நீங்கள்…” என அண்ணாமலையிடம் முத்து ஆரம்பிக்க, “அதான பார்த்தேன், வீட்டை அடகு வைத்த இடத்தில் மேலும் ₹2 லட்சம் கேட்கிறாயா?” என்று விஜயா கூறுவதுடன் நாளைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.