எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. பார்வதியை வறுத்தெடுத்த விஜயா… பார்வதி கொடுத்த பதிலடி..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் அண்ணாமலை, மனோஜை சமாதானப்படுத்தி, ரோகினியை அழைத்து வரச் சொல்லுகிறார். ஆனால், அந்த அறிவுரையை உதாசீனப்படுத்தும் மனோஜ், “அம்மா செய்தது சரிதான்,…

sa9

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் அண்ணாமலை, மனோஜை சமாதானப்படுத்தி, ரோகினியை அழைத்து வரச் சொல்லுகிறார். ஆனால், அந்த அறிவுரையை உதாசீனப்படுத்தும் மனோஜ், “அம்மா செய்தது சரிதான், ரோகிணிக்கு இந்த தண்டனை சரியான தண்டனை தான். அம்மா சொல்லாமல், ரோகிணியை நான் அழைத்து வரமாட்டேன்!” என்று கூறிச் செல்கிறார்.

இதனால் மனம் கஷ்டப்படும் அண்ணாமலையை, முத்து மற்றும் மீனா ஆறுதல் சொல்லி, “எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும்!” என்று உறுதியளிக்கின்றனர்.

இந்நிலையில், விஜயா பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார். “இந்த ரோகினி என்னை இப்படி ஏமாற்றி விட்டார்! இதற்கெல்லாம் காரணம் நீதான்!” என்று குற்றம் சாட்டுகிறார். அதற்குப் பதிலளிக்கும் பார்வதி, “நான் என்ன செய்தேன்?” என்று கேட்கிறார்.

விஜயா தொடர்ந்து, “நீதான் அவளை ‘மலேசியா காரி’, ‘பணக்காரி’ என்று சொல்லி, என் வீட்டுக்கு மருமகளாக தள்ளிவிட்டாய்!” என்கிறார்.

அதற்கு பார்வதியும் பதிலடி கொடுக்கிறார்.  “என் வீட்டிற்கு மசாஜ் செய்ய வரும் பெண் என்றுதான் ரோகிணியை நான் உனக்கு அறிமுகம் செய்தேன். ஆனால் நீ தான் ரோகிணியிடம் பேச்சு கொடுத்து, அவள் பணக்காரி என்று தெரிந்ததவுடன், மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு செய்தாய். உன்னுடைய பேராசை தான் உனக்கு பெரும் நஷ்டமாகிவிட்டது. இப்போது எல்லா பழியையும் தூக்கி என் மேல் போடாதே!” என்று கடுமையாகச் சொல்லிவிடுகிறார்.

அதற்கு பேச முடியாமல் விஜயா மௌனமாக இருந்தாலும், ரோகிணியின் மீது ஆத்திரமாக, “அவளை வீட்டுக்குள்ளே வர விடமாட்டேன்! என் பையனுடன் வாழ விடமாட்டேன்!” என்று கோபமாகக் கூறுகிறார்.

இதே நேரத்தில், “முதலில் அண்ணாமலை சொன்ன மாதிரி அவளை அழைத்து வா!” என்று மீண்டும் அறிவுரை கூறப்படுகிறதைக் கேட்டும், விஜயா மறுக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, முத்துவும் மீனாவும் ரவி மற்றும் ஸ்ருதியுடன் போனில் பேசுகின்றனர். நடந்ததை கேட்டதும், அவர்கள் “இவ்வளவு பிரச்சனை வீட்டில் நடக்கையில், நாங்களும் உடனே கிளம்பி வருகிறோம்!” என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், மனோஜ், மனைவி ஏமாற்றியதை தாங்காமல், பாரில் தனது நண்பருடன் குடிக்க செல்கிறார். “என் பொண்டாட்டி என்கிட்ட பொய் சொல்லிவிட்டா!” என்று புலம்புகிறார்.

இந்நிலையில் மீனாவுக்கு போன் செய்யும் பார்வதி, “விஜயா இன்னும் ஆத்திரமாக இருக்கிறார்? எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்லுங்கள்!” என்று கோருகிறார்.

மீனாவும் “அத்தை சாப்பிட்டார்களா?” என்று அன்புடன் கேட்டு, “கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு கட்டுவோம்!” என்று உறுதியளிப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

நாளைய எபிசோடில் தனது நண்பருடன் வண்டியில் செல்லும் போது, முத்துவுடன் மோதிய போலீஸ்காரரிடம் மாட்டிக்கின்றனர்! அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!