விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில் “போனதெல்லாம் போகட்டும், இனிமேல் இந்த குடும்பத்தில் உண்மையாக வாழ்வேன் என்று சத்தியம் செய்” என்று ரோகினியிடம் பாட்டி சொல்கிறார். அதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவிக்கிறார். “இவ்வளவு பொய் சொல்லியிருக்கிறாள், இவளிடம் சத்தியம் வாங்கி இன்னும் வாழ வைக்கப் போகிறீர்களா?” என கேட்கிறார்.
அதற்கு பாட்டி, ‘ரோகிணி பொய் சொன்னதற்கு நீயும் ஒரு காரணம். உன்னுடைய பேராசையால்தான் அவள் பொய் சொல்லியிருக்கிறார்” என்று கூறுகிறார். அதன் பிறகு “இனிமேல் நான் எந்த பொய்யும் சொல்ல மாட்டேன். இந்த குடும்பத்துக்கு உண்மையாக இருந்து, நல்ல மருமகளாகவும், மனோஜ்க்கு நல்ல மனைவியாகவும் இருப்பேன்” என்று ரோகிணி சத்தியம் செய்கிறாள்.
அதன் பிறகு பாட்டி திரும்பவும், “ரோகிணி இனிமேல் தப்பு செய்ய மாட்டாள். நீ அவளை மருமகளாக ஏற்றுக்கொள். எல்லா மருமகளையும் ஒரே மாதிரி பாரு” என்று அறிவுரை கூறுகிறார். அதே போல் ரோகிணியிடமும், “அண்ணாமலை மற்றும் விஜயாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேள்” என்று சொல்ல, மனோஜ், விஜயா ஆகிய இருவரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள்.
அதன் பிறகு, ரோகிணி தனது அறைக்குள் செல்லும் போது, முத்துவையும் மீனாவையும் பயங்கரமாக முறைக்கிறார். “உங்களிருவரால்தான் எனக்கு இந்த நிலைமை வந்துவிட்டது” என்று கூறுவது போல் ரோகிணியின் பார்வை இருந்தது.
பிறகு, பாட்டி விஜயாவிடம், “ரோகிணி பொய் சொன்னதற்கு நீதான் காரணம்” என்று கூற, அதன்பிறகு முத்து, ரவி ஆகியோரும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால் விஜயா, “ஆளாளுக்கு எனக்கு அறிவுரை கூற வேண்டாம்” என்று வெறுப்படைய, தனது அறைக்குள் செல்கிறாள்.
இந்த நிலையில், மனோஜின் அருகில் ரோகிணி சென்று “ரொம்ப தேங்க்ஸ்” என்று கூற, ஆனால் மனோஜ் அதைப் பொருட்படுத்தாமல், “நீ என்னிடமே பொய் சொல்லிவிட்டாய், நான் உன்னை நம்பினேன், என்னுடைய கடந்த கால வாழ்க்கை எல்லாவற்றையும் உன்னிடம் சொன்னேன். ஆனால் நீ என்னிடம் பொய்மேல் பொய் சொல்லிவிட்டாய்” என்று கூறுகிறான்.
அதற்கு ரோகிணி, “உன் மேல் இருந்த காதல் தான் காரணம். உன்னுடன் வாழவேண்டும் என்பதற்காகத்தான் நான் பொய் சொன்னேன். உன்னை ஒரு நல்ல நிலைமையில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று கூற, ஆனால் மனோஜ் அதை நம்பவில்லை. “இருந்தாலும், நீ என்னிடம் மட்டுமாவது உண்மையை சொல்லியிருக்கலாம்” என்று கூற, “நான் பலமுறை சொல்ல முயற்சி செய்தேன், ஆனால் அதற்கான சூழ்நிலை வரவில்லை” என்று ரோகிணி பதிலளிக்கிறார். அப்போதும் மனோஜ் சமாதானம் அடையவில்லை. இப்போது கூட நீ சொல்வதில் எது பொய், எது உண்மை என எனக்கு தெரியவில்லை என்று கூற ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
இதனையடுத்து மொட்டைமாடியில் முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, முத்து, “இப்போது கூட எனக்கு பார்லர் அம்மா எதையோ மறைக்கிறார் என்று தோன்றுகிறது. இன்னும் ஏதோ சில மர்மங்கள் அவரிடம் இருக்கின்றன” என்று சொல்ல, அதற்கு மீனா, “அவங்க எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்களே! இன்னும் என்ன இருக்கப் போகிறது?” என்று பதிலளிக்கிறார்.
அதற்கு முத்து, “இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று மனோஜ் சொன்னதே பெரிய பொய்தான். மனோஜ்க்கு உண்மையிலேயே தெரிந்திருந்தால், அவன் எதற்காக போய் தண்ணி அடிக்க வேண்டும்? எதற்காக ஷாக் ஆக வேண்டும்?” என்று கேட்கிறான்.
எல்லோரும் “ஆமாம், சரிதான்” என்று ஒப்புக்கொள்கிறார்கள். “கண்டிப்பாக, பார்லர் அம்மாவிடம் இன்னும் சில மர்மங்கள் இருக்கின்றன, அது விரைவில் வெளியே வரும்” என்று சொல்ல, அதை மறைந்திருந்து கேட்ட மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.
ஸ்ருதியும், “முத்து சொல்வது சரிதான்” என்று கூறுகிறார். அதன் பிறகு “இனிமேல் ரோகிணியை அம்மா எப்படி நடத்தப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று முத்து சொல்ல, “ஆமாம், அது எப்படி இருக்கும் என்று பார்க்க எனக்கும் ரொம்ப ஆசையாக இருக்கிறது” என்று ஸ்ருதி சொல்ல, எல்லோரும் அவரை கேலியாக பார்க்கின்றார்கள்.
இந்த நேரத்தில், மனோஜ் அருகில் ரோகிணி வந்து பேச முயல்கிறாள். ஆனால் மனோஜ் அவரிடம் பேச விரும்பாமல் அமைதியாக இருப்பதுடன், இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோடில் முத்து ‘ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடலை பாட, அண்ணாமலை ரோகிணி தான் எனக்கு பிடித்த மருமகள் என்று தூக்கி வைத்து ஆடினாய், இனி என்ன ஆகும் என்று கேட்க, ஸ்ருதியோ, ‘உங்க பேவரைட் மருமகள் ரோகிணி தான், அது இன்னும் தொடருமா? என்று கேலியாக கேட்க விஜயா ஆழ்ந்த யோசனையுடன் இருக்க்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.