சிறகடிக்க ஆசை: மீனாவின் தவறான கணிப்பால் மனோஜ்-ரோகிணிக்கு சிக்கலா?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கிரிஷின் அம்மா ஜீவா என்று மீனா தவறாக நினைக்கிறார். அதேபோல், கிரிஷின் அப்பா மனோஜ்…

SA

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கிரிஷின் அம்மா ஜீவா என்று மீனா தவறாக நினைக்கிறார். அதேபோல், கிரிஷின் அப்பா மனோஜ் என்றும் அவர் தவறாக கணிக்கிறார். இதன் விளைவாக, அண்ணாமலை குடும்பத்தில் மேலும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய எபிசோடில், மீனா மற்றும் முத்து , கிரிஷின் பாட்டி ஏன் தங்களிடம் சரியாக பேசவில்லை? என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில், திடீரென மீனா, “எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஜீவா தான் கிரிஷின் அம்மாவாக இருக்கும், மனோஜ் தான், அப்பாவாக இருக்கும்,  மனோஜ் ரோகிணிக்கு துரோகம் செய்கிறார்!” என்று கூறுகிறார்.

முத்து அதை முழுமையாக நம்பாவிட்டாலும், “ஒரு வேலை இருக்கலாம்” என்று கூறுகிறார். அதேபோல், வீட்டிற்கு வந்தவுடன் அண்ணாமலையும் கிரிஷ் குறித்து கூற, குடும்பமே கிரிஷ் குறித்துதான் ஆலோசனை செய்கிறது. இதை கேட்ட ரோகிணிக்கு தர்மசங்கடமாக உள்ளது.

இந்த நிலையில், மீனா மீண்டும் “மனோஜ் தான் கிரிஷின் அப்பா!” என்று உறுதி செய்கிறார். இந்த தவறான கணிப்பு காரணமாக, அண்ணாமலை குடும்பத்தில் மேலும் சிக்கல் ஏற்படலாம் என தோன்றுகிறது. அதேபோல், முத்து மற்றும் மீனாவுக்கு இது தேவையில்லாத இன்னொரு பிரச்சனையை உருவாக்கக்கூடும் என இன்றைய எபிசோடை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் பகுதியில் இதை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.