விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ இன்றைய எபிசோடில், அண்ணாமலை விஜயாவுக்கு போன் செய்து, “அம்மா வந்திருக்காங்க. உடனே வீட்டுக்கு வா!” என்று சொல்கிறார். உடனே விஜயா, “அவர்கள் எதற்காக வந்தார்கள்? அவர்களை எதற்காக வரச் சொன்னீங்க?” என்று கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் அண்ணாமலை, அம்மாவால் தான் இந்த விஷயத்தை பேசி முடிக்க முடியும் என்று சொல்ல, அதற்கு விஜயா “ரோகிணி என்னை ஏமாற்றி இருக்கிறாள். அவளை தண்டிக்கும்போதோ அடிக்கும்போதோ, உங்க அம்மா எதுவும் சொல்லக்கூடாது” என்ற நிபந்தனையுடன் விஜயாவை சமாதானப்படுத்துகிறார்.
இந்த நிலையில், ரோகிணியும் விஜயாவும் ஒரே நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்கள். இருவரும் ஆட்டோவில் இறங்கி வீட்டுக்குள் நுழைய, வீட்டில் உள்ளவர்கள் “இவர்கள் எப்போது வருவார்கள்?” என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் வீட்டுக்குள் வந்ததைப் பார்த்ததும், முத்து இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
பாட்டி, “உங்களுக்கு வேலையே இல்லை போல. அவங்களே சமாதானமாகி வந்துவிட்டார்கள்!” என்று கூற, விஜயா “அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறேன்!” என்று பதிலளிக்கிறார்.
அப்போது, பாட்டி விஜயாவை கண்டித்துக், “ஏன் வீட்டை விட்டு வெளியே சென்றாய்? பெரிய மனுஷியாக நீதான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீயே வீட்டை விட்டு போனாய்!” என்று குற்றம் சாட்டுகிறார்.
விஜயா, “நான் தான் ஏமாற்றப்பட்டேன். அவள் எத்தனை பொய் சொல்லி இருக்கிறாள்! அவளை எப்படி என்னால் மன்னிக்க முடியும்?” என்று கேட்கிறார்.
அப்போது, ரோகிணி வெளியே நின்று கொண்டிருக்க, பாட்டி, அண்ணாமலை, மனோஜ் ஆகிய மூவரும் மாறி மாறி “உள்ளே வா!” என்று அழைக்கின்றனர்.
அப்போது விஜயாவிடம் பாட்டி, “ரோகிணி செய்தது தவறுதான். நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவளது தரப்பை நாமும் கேட்க வேண்டும்!” என்று கூற, பாட்டி “அவள் இவ்வளவு பொய் சொல்லி இருக்கிறாள். அந்த பொய்யை நியாயப்படுத்த, இவள் இன்னும் என்ன சொல்ல போகிறாள்?” என்று ஆத்திரமாக கூறுகிறார்.
அதன்பின் மனோஜிடம், “ரோகிணியை இரண்டு அடி, நீ அடித்தால்தான் எனக்கு மனம் ஆறும்’ என்று கூற, அதற்கு மனோஜ் அமைதியாக இருக்கிறார். ஆனால், “நீ அடிக்கவில்லை என்றால், நானே அடிக்கிறேன். நான்தானே ஏமாந்தேன்!” என்று கூறி, ரோகிணியின் கன்னத்தில் பளார் பளாரெனஅடிக்கிறார்.
அப்போது, திடீரென்று மனோஜ் “அம்மா! நிறுத்துங்க! ரோகிணியை அடிக்காதீங்க!” என்று கத்துகிறார். இதனால், விஜயா மட்டுமல்ல, ரோகிணியும் அதிர்ச்சி அடைகிறாள்.
ரோகிணி பாசத்துடன் தனது கணவனை பார்க்க, மனோஜ் “ரோகிணி ஏற்கனவே எல்லாவற்றையும் எனக்கு சொல்லிவிட்டாள். அந்த ஆள் ரோகிணியின் மாமா இல்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்!” என்று கூறுகிறார்.
விஜயா அதிர்ச்சியடைந்து, “அவளை காப்பாற்ற வேண்டுமென்றே பொய் சொல்கிறாயா?” என்று கேட்டு மனோஜையும் அடிக்கிறார். அண்ணாமலையும் “நான் அன்றே கேட்டபோது, நீ ஏன் சொல்லவில்லை?” என்று கோபமாக கேட்கிறார்.
மனோஜ், “இந்த விஷயம் தெரிந்தால், அம்மா கோபப்படுவார்கள் என்பதால் தான் நான் சொல்லவில்லை” என்று பதிலளிக்க, இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோடில் கடந்த நான்கு நாட்களாக திரும்பத் திரும்ப காண்பிக்கப்படும் ரோகிணியின் சத்தியம் செய்யும் காட்சிகள் உள்ளன. இன்னும் எத்தனை நாட்கள் இதையே திருப்பி திருப்பி போடுவார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்!