விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை அழைத்து வருவதற்காக அண்ணாமலை, முத்துவுடன் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு சட்டையில்லாமல் இருக்கும் மனோஜை பார்த்து, அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார். காவல்துறை அதிகாரிகளிடம் தன் மகனை விடுமாறு கெஞ்சுகிறார்.
அப்போது, அங்கு வருகை தரும் டிராபிக் போலீஸ், முத்துவைப் பார்த்தவுடன், “உன் அண்ணன் தானா? குடும்பமே இப்படித்தானா?” என்று கோபமடைந்து பேச தொடங்குகிறார். முத்து கோபத்தை அடக்கிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், அண்ணாமலை காவல் நிலையத்திலிருந்து முத்துவை வெளியே அனுப்பிவிடுகிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் வந்தவுடன், அவரிடம் பேசியபோது, “அழைத்துச் செல்லுங்கள், இனிமேல் இப்படி நடக்கக் கூடாது” என்று இன்ஸ்பெக்டர் எச்சரிக்கிறார். இதன் பின்னர் அண்ணாமலை, மனோஜை வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
வீட்டிற்கு வந்த பிறகு, “என் பொண்டாட்டி என்னிடம் பொய் சொல்லிட்டாள்” என்று மனோஜ் புலம்புகிறார். மீனா பரிதாபமாக அவனைப் பார்க்கிறார். அண்ணாமலை, “நம்ம குடும்பத்திற்கு ஏன் இப்படி சோதனை வந்திருக்கிறது? இந்த பிரச்சனை எல்லாம் தீர வேண்டுமென்றால் என் அம்மா தான் வரவேண்டும்” என்று கூறுகிறார். அதற்குப் பதிலாக, முத்து, “நானும் அதைத்தான் சொல்கிறேன் அப்பா! வாங்க, நாம ரெண்டு பேரும் போய் பாட்டியை அழைத்து வருவோம்” என்கிறான்.
ஆனால், அண்ணாமலை “வேண்டாம்! நீ இங்கே இரு. மனோஜ் எப்படி இருக்கிறான் என்று கவனிக்க வேண்டும். நான் மட்டும் போய் பாட்டியை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி கிளம்புகிறார்.
இந்த நிலையில் சீதா, சாலையில் பேருந்துக்காக காத்திருக்கிறாள். அப்போது அங்கு வரும் டிராபிக் போலீஸ் அருண், “நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா? உண்மையைச் சொல்!” என அவளிடம் கேட்டுக் கொள்கிறான். சீதா, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும், யோசிக்கணும்! அம்மா, தம்பி எல்லாம் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள்” என பதிலளிக்கிறார்.
அருண், “அதெல்லாம் முடியாது! இப்போது நான் வண்டியை எடுத்துக்கொண்டு உன் அருகே வருவேன். என் வண்டியின் பின்னால் உட்கார்ந்துவிட்டால், நீ என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டாய் என்பதாக அர்த்தம். இல்லையென்றால்.. என்று அன்புடன் எச்சரிக்கிறார்.
சீதா சற்று யோசித்த பிறகு, அவனுடைய வண்டியில் ஏறி உட்காருகிறார். இதன்மூலம் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
நாளைய எபிசோடில் பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் முன்னிலையிலேயே, விஜயா, ரோகினியின் கன்னத்தில் தொடர்ந்து அறைய அப்போது பாட்டி “கற்பூரம் ஏற்றி இனிமேல் இந்த குடும்பத்திற்கு உண்மையாக வாழ்வேன் என்று சத்தியம் செய்!” என்று ரோகிணியிடம் கூறுகிறார்.
அப்போது, அண்ணாமலை “இன்னும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார். இதைக் கேட்டவுடன், ரோகிணிக்கு கிரிஷ் ஞாபகம் வருகிறது. கிரிஷ் குறித்து ரோகிணி குடும்பத்திடம் சொல்வாரா? அண்ணாமலை குடும்பத்தினர் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பார்களா? அல்லது ரோகிணி மீண்டும் கிரிஷ் விஷயத்தை மறைப்பாரா? இவை அனைத்தும் அடுத்த வார எபிசோடில் தெரியவரும்!