இதனை அடுத்து, ரோகிணி தனது தோழி வித்யாவிடம் தன்னுடைய நிலையை பற்றி பேசுகிறார். “என்னுடைய மாமியார் என்னை எந்த வேலையும் செய்யவிடாமல், வீட்டை விட்டு வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள்,” என்கிறார். வித்யா அதற்கு “உன் அப்பா சிறையில் இருந்தார் என்று சொன்னாய். ஆனால் இப்போது நீயே வீட்டு சிறையில் இருக்கிறாய்!” என பதிலளிக்கிறார்
இதனை அடுத்து, வித்யாவை தேடி அவரது காதலன் முருகன் வருகிறார். “இன்று எனக்கு பிறந்த நாள். உனக்காக ஒரு கேக் கொண்டு வந்தேன்,” என்கிறார். அந்த கேக்கை வித்யா திறக்கும் போது, அதில் “I love you Vidya” என்று எழுதப்பட்டுள்ளது. இதை பார்த்து வித்யா இன்ப அதிர்ச்சியடைகிறார். பின்னர், “Love” என்ற வார்த்தையை மட்டும் வெட்டி , அதை முருகனுக்கு கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். இதனால் முருகன் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் செய்கிறார்.
அதன்பின், முத்துவின் காரில் இரண்டு இளைஞர்கள் ஏறுகிறார்கள். காருக்குள்ளேயே அவர்கள் மது குடிக்க முயற்சிக்கிறார்கள். முத்து அவர்களை தடுத்து, அவர்கள் ஓவராக வண்டியை நிறுத்தி இருவரையும் இறக்கி விடுகிறார்.
அப்போது அவர்கள், “நாங்கள் யார் தெரியுமா? சிட்டி ஆட்கள் என்று கூற, முத்து பதிலளிக்கிறார்: “சிட்டி ஆட்களா? எனக்கு தெரியாமல் போய்விட்டது. உங்களை ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே போய் சரக்கடியுங்கள்.”
இந்த நிலையில் சிட்டி, சத்யாவை அழைத்து வந்து, “மீண்டும் என்னிடம் வேலைக்கு வா. உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறேன். என்னை பகைத்து கொண்டு நீ இருக்க முடியாது,” என்று மிரட்டுகிறார்.
அந்த நேரத்தில், முத்துவும் தன்னுடைய காரில் வந்த இருவருடன் அங்கு வருகிறார். சத்யாவை பார்த்து, “நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறார். பின்னர் சிட்டியை முத்து மிரட்டுகிறார்: “என்னிடமோ, என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் தலையிட்டால், நடப்பதெல்லாம் வேறு என எச்சரித்து சத்யாவுடன் வெளியே செல்கிறார்.
இதன் பிறகு, ரோகிணி கிச்சனில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனா வந்து, “நீங்கள் இங்கு எதற்காக சமையல் செய்கிறீர்கள்?” என்கிறார். ரோகிணி பதிலளிக்கிறார்: “ஆன்ட்டி தான் என்னை சமையல் செய்ய சொன்னார்.”
அந்த தருணத்தில் ஸ்ருதி வந்து சிரித்து, “நீங்கள் பேவரைட் மருமகளாக இருந்தீர்கள். ஆனால் இப்போது சோறு பொங்கும் மருமகளாக மாறிவிட்டீர்கள்! ஆனால் விதி ஒன்றுண்டு. அந்த கல்யாணத்தில் உங்களுடைய மலேசியா மாமா யார் கண்ணிலும் படாமல், முத்து மீனா கண்ணில் மட்டும் பட்டிருக்கிறார்!” என்று கூறுகிறார். இதற்கு ரோகிணி மீனாவை முறைப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளைய எபிசோடில், ‘ரோகிணியை பார்த்ததும், மனோஜ் தலையணையை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு செல்கிறார். அப்போது விஜயா தடுத்து, “உனக்குத்தான் இங்கு எல்லா உரிமையும் இருக்கிறது,” என்று கூறி அவரை உள்ளே போக செல்கிறார். உள்ளே போன மனோஜ் அமைதியாக படுத்துக்கொள்கிறார். இதைப் பார்த்து ரோகிணி கதறுவதுடன் நாளைய எபிசோடின் புரோமோ முடிவடைகிறது.