இன்றும் ஏமாற்றிய ‘சிறகடிக்க ஆசை’ இயக்குனர்.. பிரவுன் மணியை வைத்து ஒரு மாதம் இழுத்திடுவாரோ?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், பரசுவின் மகள் திருமணம் மற்றும் பிரவுன்மணியை சுற்றி இயக்குநர் சில நாட்களாக கதையை ஓட்டி வரும் நிலையில் இந்த காட்சிகள் இன்னும் ஒரு…

sa4 1

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், பரசுவின் மகள் திருமணம் மற்றும் பிரவுன்மணியை சுற்றி இயக்குநர் சில நாட்களாக கதையை ஓட்டி வரும் நிலையில் இந்த காட்சிகள் இன்னும் ஒரு மாதம் இது தொடரும் என்று தெரிகிறது.

தினமும் “நாளை அண்ணாமலை பிரவுன் மணியை பார்த்துவிடுவார்” என்ற மாதிரியான மாயையை உருவாக்கி, மறுநாள் அந்த காட்சிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கிறது. இன்றைய எபிசோடும் அதே போல் இயக்குநரின் ஏமாற்றத்துடன் முடிந்தது.

இன்றைய எபிசோடில் அண்ணாமலை தனது மகன்களுடன் சாப்பிட வரும்போது, பிரவுன்மணி சமையல் கட்டிலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதன் பின் மூவரும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். இதற்கிடையில், மீனா தனது பூக்கட்டும் அக்காக்களுடன் பேசும் காட்சிகள் இடம் பெற்றன.

பின்னர், பிரவுன்மணியுடன் பூக்கட்டும் அக்கா ஒருவரிடம், “இங்கே எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்க, அதற்கு அவர் “இந்த பூ டெக்கரேஷன் என் தோழிதான் எடுத்திருக்கிறார்,” என்று கூறி மீனாவை காண்பிக்க, அதற்குள் மீனா திரும்பிப் போய்விடுகிறார்.

இதற்குப் பிறகு, மணப்பெண்ணுக்கு ரோகினி மேக்கப் செய்யும் காட்சிகள், மீனா தனது பூக்கட்டும் அக்காக்களுடன் மீண்டும் பேசும் காட்சிகள் இடம்பெற்றன. இதனிடையே விஜயாவிடம் ஸ்ருதி, “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், இந்த சேலையில் அழகாக இருக்கிறீர்கள்,” என புகழ, விஜயா மகிழ்ச்சி அடைந்து இருவரும் போட்டோ எடுக்கின்றனர். அப்போது, மீனா மற்றும் ரோகினி வர, “நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம்,” எனக் கூற, விஜயா “எனக்கு பசிக்குது, சாப்பிட போகிறேன்,” என்று கூறிவிட்டு வெளியேறுகிறார்.

அடுத்த கட்டமாக முத்து சமையல்கூடத்திற்கு வந்து வித்தியாசமான ஒன்றைப் பார்த்து, உடனடியாக அண்ணாமலை, மனோஜ், ரவியை அழைத்து வருகிறார். ஆனால் நாம் நினைத்தது போல இல்லாமல், விஜயா தனது மூன்று மருமகளுடன் சாப்பிடும் காட்சி இடம் பெறுகிறது. இதை பார்த்து, அண்ணாமலை மகிழ்ச்சி அடைந்து, மகன்களும் தங்கள் மனைவிகளுக்கு ஊட்டுகின்றனர். மனைவிகளும் கணவர்களுக்கு ஊட்டும் காட்சிகள் மிகவும் ரொமான்டிக்காக அமைந்துள்ளது.

சில காமெடியான உரையாடல்களுக்கு பிறகு, பிரவுன்மணியுடன் சமையல்காரர் “தனக்கு உடம்பு சரியில்லை,” என்று கூற, “இன்னும் சில மணி நேரம் மட்டும்தான், நீங்கள் சமையலை முடித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்,” என பேசும் காட்சிகளும் அதன்பின் திடீரென சமையல்காரருக்கு மயக்கம் ஏற்பட, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும்

இதனை அடுத்து, பரசுவிடம் பிரவுன் மணி, “நீங்கள் கவலைப்பட வேண்டாம், எனக்கு ஓரளவுக்கு சமையல் தெரியும், நான் சமையலை பார்த்துக்கொள்கிறேன்,” என்று கூற, சமையல்கூடத்திற்குள் செல்கிறார். இது பற்றி அண்ணாமலை மற்றும் பரசுவுக்கு இடையே உரையாடல் நடக்கிறது.

இதையடுத்து முத்து மற்றும் ரவி உரையாடும் சில காட்சிகள் இடம் பெற்றன. பின்னர், அண்ணாமலை மாத்திரை சாப்பிட சுடுதண்ணி எடுக்க சமையல்கூடத்திற்கு முத்து செல்கிறார். அதே நேரத்தில் அங்கு பிரவுன்மணி வேலை செய்து கொண்டிருப்பதை முத்து கவனிக்கவில்லை.

இதே நேரத்தில், இரண்டு இளைஞர்கள் மது அருந்த முயற்சி செய்ய, அதை முத்து கவனிக்கிறார். அப்போது, முத்து, அந்த மதுபாட்டிலைக் கைப்பற்றி வைத்திருக்க, மனோஜ் பார்த்து “இவர் வேறு மாதிரி நினைக்கிறார். அவர் அனேகமாக தனது வீட்டாரிடம் இதை போட்டு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைய எபிசோடில், “அண்ணாமலை குடும்பத்தினர் பிரவுன்மணியை பார்க்கும்” காட்சிகள் வருவது போல் வழக்கமாக இருந்தாலும், இயக்குநர் நாளையும் ஏமாற்ற அதிக வாய்ப்பு உள்ளது.