காதல் மனைவிக்காக பாடல் வாய்ப்புத் தேடிய கணவன்: ரிக்கார்டிங்-ன் போது பிரபல இயக்குநரின் அம்மாவுக்கு நேர்ந்த இளம் வயது சோகம்

By John A

Published:

மோகன்-ரேவதி நடித்த உதயகீதம் படத்தைப் பார்க்காதவர்கள் வெகு சிலரே. பாடல்களாலும், கவுண்டமணியின் எவர்கிரீன் காமெடியாலும் ஹிட் ஆன படம் இது. இப்படத்தில் ரேவதி மோகனின் கச்சேரிகள் அனைத்திலும் சென்று அவரது பாட்டுக்கு ரசிகையாகி பின் காதலிப்பது போல் கதை இருக்கும். இதேபோல் நிஜ வாழ்விலும் ஒரு சினிமா பிரபலத்திற்கு நடந்துள்ளது.

பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன் அப்போது மேடைக் கச்சேரிகளில்  பாடிக் கொண்டிருந்தார். அவரது பாடலுக்கு ரசிகனாகி பின்னர் காதலித்துக் அவரையே கரம்பிடித்தார் அவரது கணவர். தன் மனைவியின் திறமையை அறிந்து பிரபல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார் அவரது கணவர். மத்திய அரசுப் பணியில் இருந்தாலும் மனைவியின் பாடல் திறமையை வெளிக் கொணரும் முயற்சியில் இருந்தார்.

அவ்வாறே எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இருந்து சுஜாதா என்ற படத்தில் பாடுவதற்காக வாய்ப்பு வர அச்சமயம் தனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்த கணவர் டில்லியில் இருந்திருக்கிறார். நீ பாடும் போது நான் உன்னுடன் இருப்பேன் என்று கூறியவர் ரெக்கார்டிங் செய்யும் நாளும் வந்தது. ஆனால் கல்யாணி மேனனின் கணவர் வரவில்லை.

விஸ்வநாதன் அவர்கள் சொல்கிறார்.. “நான் உன் அப்பா மாதிரி.. நான் உன்னை ஆசீர்வாதிக்கிறேன் நீ பாடு என்று சொல்லி பாட சொல்கிறார். அந்த பாடலை பாட ஆரம்பிக்கிறார்.. அந்தப் பாடல்தான்

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

இளையராஜா இசையமைத்த ஒரே அஜீத் படம்… யார் டைரக்டர்ன்னு தெரியுமா?

அவரும் தன் கணவருக்காக காத்திருந்து வராததால் உள் மனதில் இருந்து அந்த பாடலின் வரிகளுக்கு உயிர் தந்து பாடுகிறார். பாடல் அருமையாக வந்ததில் எல்லாவருக்கும் மகிழ்ச்சி. எல்லோர் கண்களிலும் ஆனந்த கண்ணீர். ஒருமணி, இரண்டு மணி, மூன்று மணி ஆனது கணவர் வரவில்லை. போன் தான் வந்தது கணவர் இறந்து விட்டார் என்று. அதிர்ச்சியில் உறைந்த அவர் அப்பாடலுக்குப் பின் சில காலம் இவர் பாடவில்லை. அப்போது அவருக்கு வயது 37.

இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தான் இந்திய சினிமாவின் ஸ்டைலிஷ் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மற்றும் மற்றொருவர் ஐ.ஆர்.எஸ் அதிகாரி. இதில் ராஜீவ் மேனனும், ஏ.ஆர்.ரகுமானும் சிறந்த நண்பர்கள். மணிரத்னத்திடம் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகப்படுத்தியதே ராஜீவ் மேனன் தான்.

அதன் பின் ராஜீவ் மேனன் தனது தாய் கல்யாணி மேனனை ஏ.ஆர்.ரகுமான் இசையில் மீண்டும் பாட வைத்தார். அப்படி உருவான ஹிட் பாடல்கள் தான் குலுவாலிலே, ஓமனப் பெண்ணே, காதலன் படத்தில் இடம் பெற் இந்திரையோ, அலைபாயுதே படத்தில் அலைபாயுதே கண்ணா, பார்த்தாலே பரவசம் படத்தில் இடம்பெற்ற அதிசய திருமணம் போன்ற பாடல்கள். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகமே கொண்டாடிய 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடலும் கல்யாணி மேனன் பாடியதே.

கல்யாணி மேனன் அவர்கள் தமிழில் சில பாடல்களே பாடியிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்களாக என்றும் அவரை நினைவுப்படுத்தும்.