இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் முதல் படமான ‘கண்ணும் கொள்ளையடித்தால்’ சூப்பர் ஹிட்டானது. சினிமா துறையில் இருக்கும் பலரும் தேசிங் பெரியசாமியை பாராட்டினர். சூப்பர் ஸ்டாரும் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார்.
அதோடு, தேசிங் பெரியசாமியுடன் இணைந்து படம் பண்ணுவதற்கும் விரும்பினார். தேசிங் பெரியசாமிக்கு இரண்டாவது படத்திலேயே ஜாக்பாட் அடித்தாக திரையுலகில் பேசினர். தேசிங் பெரியசாமியும், சூப்பர் ஸ்டாரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கினார்.
ஆனால், நீண்ட காலமாகியும் தேசிங்கு பெரியசாமி, சூப்பர் ஸ்டாரின் காம்போவில் எந்த படங்களின் அறிவிப்பு வெளிவரவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மற்ற இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி கொண்டே இருக்கிறார். இந்நிலையில், ‘STR48’ படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்ற கூறப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரிடம், அவர் சொன்ன கதை, அடுத்த கட்டத்திற்கு போகாத நிலையில், அதே கதையை சிம்புவிடம் சொல்லி இருக்கிறார். சிம்புவிற்கு கதை மிகவும் பிடித்து போகவே, அவரும் நடிப்பதற்கு ஓ.கே சொல்லிவிட்டார். STR48 படத்தை கமல் ஹாசனின் ’ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர்.
STR48ல் சிம்புவுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். பீரியட் கதை என்பதால், அதற்கான ப்ரீ ஒர்க்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பீரியட் கதையாக இருந்தாலும், மாஸ் படமாக இருக்கும். படத்தில் சிம்புவின் திறமைகள் அனைத்தையும் வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு படத்தில் இருக்கிறது. மேலும், சூப்பர் ஸ்டாருக்கு சொன்ன கதை சிம்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று தேசிங்கு பெரியசாமி இண்டர்வீயூ ஒன்றில் கூறியிருந்தார்.
பீரியட் ஃபிலிம் என்பதால், ஷூட்டிங் முழுவதும் ஸ்டூடியோவில் தான் நடக்க போகிறது. லைவ் ஸ்பாட் கிடையாது. பீரியட் ஃபிலிம் என்றால் அதில் மியூசிக்கிற்கு கூடுதல் கவனம் தேவை. அதோடு புதுமையும் வேண்டுமென்பதால்,‘KGF’ மியூசிக் டைரக்டர் ரவி பாசூரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதோடு இன்னும் சில பேரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
‘STR48’ ஆரம்பகட்ட பணியில் இருக்கிறது. படப்பிடிப்பு 2024ல் தொடங்கும் படம் 2025ல் ரீலிஸாகும் என்று கூறப்படுகிறது. படத்திற்காக சிம்பு அதிகம் மெனக்கெடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு முழு ஈடுபாட்டுடன் இருப்பதால்தான், கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அந்த இடத்தை தான் துல்கர் சல்மான் பிடித்திருக்கிறார்.