சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருந்த ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கும் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வருவதை அடுத்து தனது பிறந்தநாளை ’மாநாடு’ படக்குழுவினருடன் பிரமாண்டமாக கொண்டாடிவிட்டு அதன்பின்னர் படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று ச்ம்பு வேண்டுகோள் விடுத்தார்
சிம்புவின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ’மாநாடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது