விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் ‘வீட்டை வைத்து எல்லாம் பணம் கொடுக்க முடியாது, வீடு ஏற்கனவே கடனில் இருக்கிறது’ என்று கூறிய விஜயா, மீனா என்னமோ சொந்தக் காலில் நிற்கப் போகிறார்கள் என்று சொன்னாய், இப்போது நீ பூ கட்டுவதற்கு என்னுடைய வீடு தான் கிடைத்ததா?’ என்று கிண்டலாக போற மனோஜும், ‘அப்படி எல்லாம் வீட்டை மேல் மேலும் பணம் வாங்க முடியாது, வட்டி அதிகமாகி ஒரு கட்டத்தில் வீடே மூழ்கி விடும்’ என்று சொல்ல, முத்து அதன் பின்னர் ’நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரியாமல் ஏன் இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி பேசுகிறீர்கள்?’ என்று கூறுகிறார்.
அதன் பின்னர், ‘எனக்கு வீடு வேண்டாம், அந்த வீட்டில் இருந்து வரும் பணமும் வேண்டாம்’ என்று கூற மீனாவும், ‘கண்டிப்பாக உங்கள் வீட்டை வைத்து நாங்கள் பணம் கேட்க மாட்டோம், எங்களால் நீங்கள் நடுத்தெருவில் நிற்க மாட்டீர்கள்’ என்று கூறுகிறார்.
அதன்பின், ‘அண்ணாமலை இடம் பெற்று பாட்டியிடம் பணம் கேட்கலாம் என்று தான் நான் பேச்சை ஆரம்பித்தேன்’ என்று கூற, ‘பாட்டி இடம் கேட்பதற்கு எதற்காக நீ என்னிடம் அனுமதி கேட்க வேண்டும், என்னை வளர்த்தது போல்தான் உன்னையும் பாட்டி வளர்த்தாங்க, அதனால பாட்டி இடம் இது தாராளமாக கேட்டுக்கொள்’ எனக் கூறுகிறார்.
அப்போது சுருதி, விஜயாவிடம், ‘ஆண்ட்டி, நீங்கள் அவசர குடுக்கை என்பதை நிரூபித்து விட்டீர்கள். முத்து என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமலேயே ஏதாவது சொல்லி வாங்கி கட்டி கொள்கிறீர்கள் ’ என்று கூற, விஜயா மேலும் ஆத்திரமாகிறார்.
எல்லோரும் கலைந்து சென்ற பின், முத்துவிடம் மீனா, ‘பாட்டியிடம் கேட்க வேண்டாம், அவங்க கிட்ட பணம் இல்லை என்றால் ஏதாவது கடன் வாங்கி கொடுப்பார்கள். அப்படி ஒரு நிலைமை வேண்டாம். நான் ஒரு பைனான்சியரிடம் கேட்டு பார்க்கிறேன்’ என்று கூறுகிறார்.
அந்த பைனான்சியரிடம் மீனா சென்றபோது, அவர் பணம் தர மறுக்கிறார். ‘டெபாசிட் கட்டுவது என்பது ரொம்ப ரிஸ்க் , வேலை சரியில்லை என்றால் டெபாசிட் திருப்பி கொடுக்க மாட்டார்கள். எனவே, ஆர்டர் வந்தால் சொல், நான் பணம் தருகிறேன். டெபாசிட் கட்டுவதற்கெல்லாம் பணம் தர முடியாது’ என்று சொல்கிறார்.
இதனை அடுத்து, மீனா சோகமாக வீட்டை விட்டு வெளியே வந்து, முத்துவுடன் நடந்ததை தெரிவிக்கிறார். ‘சரி, பரவாயில்ல விடு, நாம் ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம்’ என்று முத்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
இந்த நிலையில் தான், முத்து காரில் சென்று கொண்டிருக்கும்போது அவரது காரை அருண் மறிக்கிறார். ‘நீ குடித்துவிட்டு தான் வந்திருப்பாய் எனக்கு நன்றாக தெரியும் ஊது’ என்று கூற, ‘ஊத முடியாது’ என்கிறார் முத்து .
‘ஊதாவிட்டால் கேஸ் போடுவேன்’ என்று அருண் கூற, ‘எங்கே கேஸ் போடுங்க பார்ப்போம்’ என்று முத்து சவால் விடுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.