சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பிரம்மாண்ட ஹிந்தி நடிகர்!

By Velmurugan

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்புக்கு இணை சிவாஜி அவர்களே என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் அவர் எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரமாகவே மாறி அதில் நடித்துக் கொடுத்து அந்த படத்தை வெற்றி அடைய செய்திருப்பார். நடிப்பின் திலகம் ஆகவே வாழ்ந்து வந்த சிவாஜி அவர்களின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருந்து வந்துள்ளனர்.

அந்த காலத்தில் சிவாஜியின் நடிப்பு பாலிவுட் வரையும் கொடி கட்டி பறந்து வந்தது. சிவாஜிக்கு போட்டியாக எம்.ஜி.ஆர் பல படங்களில் திறமையாக நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் படங்கள் கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும் சிவாஜியின் நடிப்பு திறமைக்கு எம்.ஜி.ஆர் படங்கள் ஈடுகட்ட முடியாத நிலைமையே இருந்து வந்துள்ளது. அந்த அளவிற்கு தத்ரூபமாக படங்களில் நடித்து, பார்க்கும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது சிவாஜியின் நடிப்பு திறமை.

பொதுவாக தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிடுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான ஒரு வெற்றி படத்தை பாலிவுட்டில் ரீமிக்ஸ் செய்ய வேண்டும் என முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் ஆசைப்பட்டு பாலிவுட்டின் பிரபலமான ஹீரோ ஒருவரை அனுப்பியுள்ளார். ஆனால் அவர் சிவாஜியின் நடிப்பு திறமையை பார்த்து இந்த படத்தில் நான் நடிக்க முடியாது என பின் வாங்கியுள்ளார்.

அவருடைய நடிப்பிற்கு என் நடிப்பு ஈடாகாது, அவரை போல் என்னால் நடிக்க முடியாது எனக் கூறி மறுத்துள்ளார். அந்த ஹீரோ யார், அந்த படம் என்ன படம் என்பதை இந்த தொகுப்பில் விளக்கமாக பார்க்கலாம். அந்த படமும், கதையும் அப்படியே ஒத்திவைக்கப்பட்டது.

1958 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உத்தமபுத்திரன். இந்த திரைப்படத்தில் சிவாஜி இரட்டை கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். இந்த படத்தை தான் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என நினைத்து ஹிந்தி பழங்கால நடிகரான அசோக் குமாரை அணுகியுள்ளார்.

தமிழில் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தை பார்த்த ஹிந்தி நடிகர் அசோக் குமார், படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி நன்றாக நடிப்பார் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் அவர் படத்தை பார்க்கிறேன். என்ன ஒரு மனிதர், என்ன ஒரு சிறந்த நடிப்பு, இந்தப் படத்தில் என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது. அப்படி நடித்தாலும் நன்றாக இருக்காது எனக் கூறி அந்த படத்தின் வாய்ப்பை அசோக் குமார் மறுத்துள்ளார்.

இப்படி ஒரு சம்பவம் திரை உலகில் மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது. 1961 ஆம் ஆண்டு இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான எவர்கிரீன் திரைப்படம் தான் பாசமலர். இந்த படத்தில் சிவாஜி அவர்களின் நடிப்பும் சாவித்திரி அவர்களின் நடிப்பும் யாராலும் தோற்கடிக்க முடியாது. மேலும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இதை படம் என்பதை கூட மறந்து கண்ணீர் விட்டு அழுத காலங்களும் உண்டு. அந்த அளவிற்கு அண்ணன் தங்கை பாசத்தை மிக தத்ரூபமாக படமாக்கி இருப்பார்கள்.

தளபதி 68 படம் வாரிசு படத்தின் இரண்டாம் பாகமா.. கலாய்த்தவர்களுக்கு பதிலடி இதோ!

இந்த படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய நினைத்த தயாரிப்பாளர் ராஜாமணி அவர்கள் மீண்டும் ஹீரோ அசோக் குமாரிடம் சென்று நேரில் பேசியுள்ளார். அப்போது அசோக் குமார் நான் அந்த படத்தை பார்க்கவில்லை. அப்படி அந்த படத்தை பார்த்தால் என்னால் அது போல் நடிக்க முடியாது. எனவே உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் சொல்லுங்கள் நான் அந்த படத்தில் நடித்து கொடுக்கிறேன் எனக் கூறி தமிழில் சிவாஜி நடித்த பாசமலர் படத்தை ஹிந்தியில் அசோக் குமார் நடித்தார். இந்த படம் ஹிந்தியில் மாபெரும் ஹிட் அடித்தது.

ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் கூட நடிகர் திலகத்துடன் போட்டி போட முடியவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.