வில்லனாக நடிக்க ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

By Velmurugan

Published:

தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களுக்கு என தனி இடம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வெற்றிகரமான சீரியல் என்பது அதில் நடிக்கும் கதாபாத்திரத்தின் நடிப்பை பொருத்தே அமைகிறது. மக்களுக்குப் பிடித்த சீரியல் கொடுத்து டி.ஆர்.பி யில் முன்னிலை வகிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் சில சீரியல்கள் பல ஆண்டுகள் தொடர்ந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தும் வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியலை யாராலும் மறக்க முடியாது. அந்த சீரியலை இயக்கிய இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் தற்பொழுது பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த எதிர்நீச்சல் சீரியல் குறுகிய காலத்தில் மக்கள் மனதை கவர்ந்து மிகப்பெரிய பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் தான். குடும்பக் கதையை மையமாக வைத்து திருமுருகன் இயக்கிய எதிர்நீச்சல் நாடகத்தில் குணசேகரன் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பணக்கார திமிருடன், வீட்டு பெண்களை மதிக்காமல் நடத்தும் குணசேகரனின் கதாபாத்திரம் சீரியல் பார்த்து வரும் பெண்களை தன் பக்கம் திரும்ப வைத்தது.

ஏம்மா ஏய் என மாரிமுத்து கூறும் அந்த ஒரு வசனத்திற்கு ரசிகர்கள் அடிமையாகத் தொடங்கினர். அந்த அளவிற்கு அவரது நடிப்பு இயல்பாகவும், தத்ரூபமாகவும் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நடிகர் தற்பொழுது நம்முடன் இல்லை.

இந்த சூழ்நிலையில்தான் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆன வேலராமமூர்த்தி அவர்களிடம் பேச்சு வார்த்தை முதலில் நடந்தது. தயாரிப்பாளர்கள் மற்றும் சன் டிவியின் வேண்டுகோளுக்கு இணங்க வேலராமமூர்த்தி இந்த தொடரில் நடிக்க சம்மதித்துள்ளார். அதன்படி கடந்த நான்கு நாட்களுக்கு பின் குணசேகரன் கதாபாத்திரத்தின் புதிய என்ட்ரி ஆக வேலராமமூர்த்தி நேற்று நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.

தளபதி 68 படம் வாரிசு படத்தின் இரண்டாம் பாகமா.. கலாய்த்தவர்களுக்கு பதிலடி இதோ!

குணசேகரன் ஆக எதிர்நீச்சல் சீரியலில் வேலராமமூர்த்தி நடித்த காட்சிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் தான் மாரிமுத்து போன்று நடித்தாலும் தனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, அதை வெளியே கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பெறுவேன் என கூறியுள்ளார். எழுத்தாளர் வேலராமமூர்த்தி அவர்களும் நடிகர் மற்றும் இயக்குனர் ஆன மாரிமுத்து அவர்களும் நெருங்கிய நண்பர்கள். கொம்பன் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தும் உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் வேலராமமூர்த்தி அவர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த நாடகத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அவர்களின் ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மறைவிற்குப் பின் சினிமாக்களில் பிஸியாக நடித்து வந்த வேலராமமூர்த்தி இந்த நாடகத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் வேலராமமூர்த்தி அவர்களுக்கு மாரிமுத்து அவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 40 ஆயிரம் ரூபாய் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுவதாக  தகவல் கிடைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...