மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான்… RJ பாலாஜி பகிர்வு…

பாலாஜி பட்டுராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட RJ பாலாஜி ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். கோயம்புத்தூரில் ரேடியோ மிர்ச்சியில் RJ வாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ‘ஹலோ…

RJ Balaji

பாலாஜி பட்டுராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட RJ பாலாஜி ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். கோயம்புத்தூரில் ரேடியோ மிர்ச்சியில் RJ வாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ‘ஹலோ கோயம்புத்தூர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பின்னர் சென்னைக்கு வந்த RJ பாலாஜி 92.7 பிக் எப். எம் இல் சேர்ந்தார். தனது படபடப்பன பேச்சிலும் டைமிங் கவுண்டர் பேச்சிற்காகவும் பிரபலமானார். 2013 ஆம் ஆண்டு ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு ‘ நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில் ஒரு முழு நீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான SIIMA விருதை வென்றார். அதைத் தொடர்ந்து ‘ கடவுள் இருக்கான் குமாரு’, ‘காற்று வெளியிடை’, ‘ஸ்பைடர்’ போன்ற படங்களில் நடித்தார்.

2019 ஆம் ஆண்டு ‘LKG’ திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் முழு நேர ஹீரோவானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டு நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி நடித்தார். இப்படம் மாபெரும் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ‘வீட்ல விஷேஷம்’, ‘ரன் பேபி ரன்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது RJ பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ வெளியாகி நல்ல விமர்சங்களைப் பெற்று ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட அனுபவத்தை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலைத்துள்ளார் RJ பாலாஜி. அவர் கூறியது என்னவென்றால், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ருதி ஹாசன் அவர்கள் தான். பின்னர் தான் நயன்தாரா அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார் RJ பாலாஜி.