தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரபலங்கள் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது 18 வது வயதிலேயே சினிமாவில் நாயகனாக தோன்றியவர். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
1984 ஆம் ஆண்டு தனது பத்தாவது வயதில் குழந்தை நடிகராக அறிமுகமான நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்ற நடிகர் விஜய் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆனார்.
பல வெற்றி படங்களில் சமூகப் பிரச்சினைகளை எடுத்து பிரதிபலிக்கும் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஜய் தனது நடிப்பிற்காக மூன்று தமிழக அரசு திரைப்பட விருது, ஒரு காஸ்மோபாலிட்டன் விருது, ஒரு இந்தியா டுடே விருது, ஒரு சைமா விருது, எட்டு விஜய் விருதுகள், மூன்று எடிசன் விருதுகள், இரண்டு விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றவர் விஜய்.
விஜய் நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் ஆவார். அது மட்டுமில்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நடிகராக நடித்து வந்த விஜய் பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு மக்களுக்காக பணி செய்ய விரும்புவதாக அறிவித்து கட்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். விஜய் அவர்களின் தாயார் திருமதி ஷோபனா ஆவார். இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார். விஜயின் அம்மா ஷோபனா அடிக்கடி நேர்காணல்களில் கலந்து கொள்வது உண்டு.
அப்படி ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சோபனா அவர்களிடம் சினிமாவில் விஜய்யுடன் நடித்த நடிகைகளில் அவருக்கு சிறந்த ஜோடியாக இருக்கும் நடிகை யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோபனா அவர்கள் நிறைய நடிகைகள் விஜய் கூட நடிச்சிருக்காங்க. ஆனா அவருடன் நடிச்ச ஜோடியிலே சிறப்பானவங்க யாருன்னா சிம்ரன் அவர்கள் தான். விஜய் சிம்ரன் ஜோடி அவ்ளோ நல்லா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார் விஜயின் தாயார் ஷோபனா அவர்கள்.