பாலு மகேந்திரா இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அதிகமாக பணிபுரிந்தவர். 1978 ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவு செய்து அறிமுகமானார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என பல திரைப்படங்களில் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகளை செய்தார். 1983 ஆம் ஆண்டு கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை வைத்து ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறந்த கதைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றது.
மூன்றாம் பிறை படத்தின் வாயிலாக பிரபலமான இன்னொரு பிரபலம் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 80 களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. எந்த படமானலும் சில்க் ஸ்மிதா ஒரு காட்சியில் அல்லது பாடலில் வந்தால் கூட அந்த படம் ஹிட் தான். அப்படி சில்க் ஸ்மிதாவை முதலில் அனைவரையும் கவனிக்க வைத்த திரைப்படம் தான் மூன்றாம் பிறை. தன் வசீகரிக்கும் கண்களால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே கட்டி போட்டிருந்தவர் சில்க் ஸ்மிதா. ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழடைந்தவர்.
இந்நிலையில், தற்போது பாலு மகேந்திரா சில்க் ஸ்மிதா பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. அதில் பாலு மகேந்திரா கூறியது என்னவென்றால், நான் பல நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் நான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா தான் என்று கூறியுள்ளார் பாலு மகிந்திரா.