சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷபி பாபு.
இவரின் நடிப்பு ஆர்வத்தை வைத்து இயக்குனர் மில்கா தனது சண்டிமுனி படத்தில் மந்திரவாதியாக நடிக்க வைத்துள்ளார்.
இதில் மந்திரங்கள் ஓதும் ஃபாய் கேரக்டரில் நடித்த இவர் உண்மையிலேயே மந்திரங்களை கற்றுக்கொள்ள ஒருவரிடம் இரண்டு வருடங்கள் தங்கி கற்றுக்கொண்டு அந்த குருவிடம் மந்திர பயிற்சிக்காக தீட்சை வாங்கினாராம்.
சென்னை வண்டலூரை பூர்விகமாக கொண்ட இவர் பலவித கதாபாத்திரங்களை உணர்ந்து தெளிவாக நடிக்க கூடியவர் ஆவார்.