இந்தியாவில் முதல்கட்டமாக ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஊரடங்கானது ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து மே 3 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக ஊரடங்கானது மே 3 ஆம் தேதியில் இருந்து மே 17 ஆம் தேதி வரையிலும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கரவேல் ஆதத் சே மஜ்பூர் , குல்தீபக் போன்றவை இர் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
ஊரடங்கால் சம்பளம் ஏதும் வழங்கப்படாதநிலையில், நேற்று முன்தினம் மன்மீத் க்ரேவல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மன்மீத்தின் மனைவி இதுகுறித்து கூறியதாவது, “ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில், வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. மேலும் கடன் காரர்களும் கடனைத் திருப்பிக் கேட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் தவித்தநிலையில், வேலைக்குச் வெளிநாடு செல்ல நினைத்த நிலையில் கொரோனா பாதிப்பால் எதையும் செய்ய முடியாமல் மனம் நொந்து இருந்தார்” என்று கூறியுள்ளார்.